கருணாநிதியுடன் பிரதமர் மோதி: ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு (புகைப்படத் தொகுப்பு)

திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோதி அவரது இல்லத்தில் சந்தித்துவிட்டு சென்றுள்ளார். அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு.

தினத்தந்தி நாளிதழின் பவளவிழாவில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோதி தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
படக்குறிப்பு, தினத்தந்தி நாளிதழின் பவளவிழாவில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோதி தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கருணாநிதியின் கையை பற்றிய பிரதமர் மோதி
படக்குறிப்பு, திங்கட்கிழமை பிற்பகல் 12 மணியளவில் கோபாலபுரத்தில் உள்ள மு. கருணாநிதியின் இல்லத்திற்கு நரேந்திர மோதி வந்தார்.
கருணாநிதியின் கையை பற்றிய பிரதமர் மோதி
படக்குறிப்பு, நரேந்திர மோதியை தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
கருணாநிதியின் கையை பற்றிய பிரதமர் மோதி
படக்குறிப்பு, நரேந்திர மோதியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்திருந்தனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை முதல் தளத்தில் உள்ள அவரது அறையில் சந்தித்த நரேந்திர மோதி, அவரது கரங்களைப் பிடித்தபடி நலம் விசாரித்தார்.
படக்குறிப்பு, தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்த நரேந்திர மோதி, அவரது கரங்களைப் பிடித்தபடி நலம் விசாரித்தார்.
கருணாநிதியின் கையை பற்றிய பிரதமர் மோதி
படக்குறிப்பு, பிரமதர் மோதி வருகையை ஒட்டி ஏராளமான பா.ஜ.க. மற்றும் தி.மு.க. தொண்டர்கள் கோபாலபுரத்தில் குவிந்திருந்தனர்.
கருணாநிதியின் கையை பற்றிய பிரதமர் மோதி
படக்குறிப்பு, மோதி புறப்பட்டுச் சென்ற பிறகு, கீழே வந்த கருணாநிதி, கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். இது அங்கிருந்த தொண்டர்களுக்கு உற்சாகமளித்தது.