ஒட்டகத்தில் பயணிக்கும் பெண்கள் குழு வழங்கும் சிறப்பு செய்தி

இந்திய எல்லையில் அமைந்துள்ள பஞ்சாப் மாநில எல்லை கிராமங்கள் வழியாக அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்களில் அமர்ந்தபடி இந்தப் பெண்கள் எங்கே செல்கின்றனர்? எதற்காக இந்த ஊர்வலமும், ஒட்டக சவாரியும்?

பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் செல்லும் பெண்களின் இந்த ஒட்டகச் சவாரி மக்களுக்கு ஆர்வமூட்டும் ஊர்வலமாக இருக்கிறது.

பட மூலாதாரம், Pal Singh Nauli

படக்குறிப்பு, பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் செல்லும் பெண்களின் இந்த ஒட்டகச் சவாரி மக்களுக்கு ஆர்வமூட்டும் ஊர்வலமாக இருக்கிறது.
குஜராத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் வரை இந்த பெண்கள் மேற்கொண்டிருக்கும் ஒட்டக ஊர்வலம் ஒரு சிறப்பு நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Pal Singh Nauli

படக்குறிப்பு, குஜராத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் வரை இந்த பெண்கள் மேற்கொண்டிருக்கும் ஒட்டக ஊர்வலம் ஒரு சிறப்பு நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை பி.எஸ்.எஃப்பில் பணிபுரியும் இந்தப் பெண்கள், எல்லையோர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு ஒரு சிறப்புச் செய்தியை கொண்டு செல்கின்றனர்.

பட மூலாதாரம், Pal Singh Nauli

படக்குறிப்பு, இந்திய விமானப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை பி.எஸ்.எஃப்பில் பணிபுரியும் இந்தப் பெண்கள், எல்லையோர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு ஒரு சிறப்புச் செய்தியை கொண்டு செல்கின்றனர்.
விமானப்படை மற்றும் பி.எஸ்.எஃப்பை சேர்ந்த இந்த பெண்கள், ‘பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள்’ என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் ஊர்வலத்தை மேற்கொண்டுள்ளனர்.

பட மூலாதாரம், Pal Singh Nauli

படக்குறிப்பு, விமானப்படை மற்றும் பி.எஸ்.எஃப்பை சேர்ந்த இந்த பெண்கள், ‘பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள்’ என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் ஊர்வலத்தை மேற்கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களின் வழியாக நூற்றுக்கணக்கான ஒட்டகங்களில் பெண்கள் சவாரி செய்தபடி ஊர்வலம் வருகின்றனர்.

பட மூலாதாரம், Pal Singh Nauli

படக்குறிப்பு, பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களின் வழியாக நூற்றுக்கணக்கான ஒட்டகங்களில் பெண்கள் சவாரி செய்தபடி ஊர்வலம் வருகின்றனர்.
இந்த ஒட்டக ஊர்வலம் குஜராத்தில் 443 கிலோ மீட்டர் மற்றும் ராஜஸ்தானில் 609 கிலோமீட்டர் தொலைவையும் கடந்து வந்துள்ளது.

பட மூலாதாரம், Pal Singh Nauli

படக்குறிப்பு, இந்த ஒட்டக ஊர்வலம் குஜராத்தில் 443 கிலோ மீட்டர் மற்றும் ராஜஸ்தானில் 609 கிலோமீட்டர் தொலைவையும் கடந்து வந்துள்ளது.
குஜராத்தில் இருந்து கிளம்பிய ஒட்டக ஊர்வலம் தற்போது பஞ்சாபில் உள்ள அபோஹருக்கு வந்துள்ளது.

பட மூலாதாரம், Pal Singh Nauli

படக்குறிப்பு, குஜராத்தில் இருந்து கிளம்பிய ஒட்டக ஊர்வலம் தற்போது பஞ்சாபில் உள்ள அபோஹருக்கு வந்துள்ளது.
நெற்றியில் பொட்டு வைக்கிறார் ஒரு பெண்.

பட மூலாதாரம், Pal Singh Nauli

படக்குறிப்பு, இந்த ஊர்வலம் செல்லும் இடங்களில் எல்லாம் மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அலங்கரிக்கப்பட்ட ஒட்டங்கள் கொண்ட ஊர்வலம் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பெண் குழந்தைகளின் முக்கியத்துவம், அவர்களுக்கு கல்வி கற்பிப்பதன் அவசியம் பற்றி வலியுறுத்தப்படுகிறது. மக்கள் ஒட்டகங்களுக்கு முன் நின்று ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

பட மூலாதாரம், Pal Singh Nauli

படக்குறிப்பு, அலங்கரிக்கப்பட்ட ஒட்டங்கள் கொண்ட ஊர்வலம் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பெண் குழந்தைகளின் முக்கியத்துவம், அவர்களுக்கு கல்வி கற்பிப்பதன் அவசியம் பற்றி வலியுறுத்தப்படுகிறது. மக்கள் ஒட்டகங்களுக்கு முன் நின்று ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
10 இந்தத் திட்டத்தின்கீழ் பஞ்சாப் மாநிலத்தில் 316 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்க திட்டமிடப்பட்டது.

பட மூலாதாரம், Pal Singh Nauli

படக்குறிப்பு, 10 இந்தத் திட்டத்தின்கீழ் பஞ்சாப் மாநிலத்தில் 316 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்க திட்டமிடப்பட்டது.
இந்த ஒட்டக ஊர்வலம் அக்டோபர் இரண்டாம் தேதியன்று அட்டாரி-வாஹா எல்லைப் பகுதியை சென்றடையும். அப்போது ஊர்வலம் மொத்தம் 1368 கிலோ மீட்டர் தொலைவு பயணத்தை நிறைவு செய்யும்.

பட மூலாதாரம், Pal Singh Nauli

படக்குறிப்பு, இந்த ஒட்டக ஊர்வலம் அக்டோபர் இரண்டாம் தேதியன்று அட்டாரி-வாஹா எல்லைப் பகுதியை சென்றடையும். அப்போது ஊர்வலம் மொத்தம் 1368 கிலோ மீட்டர் தொலைவு பயணத்தை நிறைவு செய்யும்.