நாடாளுமன்றத்தில் கொண்டாட்டங்களுடன் அமலான ஜி.எஸ்.டி (புகைப்படத் தொகுப்பு)

மோதி அரசாங்கம் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை ஜுன் 30 ஆம் தேதி நள்ளிரவு அமல்படுத்தியது. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக நடைபெற்ற நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு.

जीएसटी

பட மூலாதாரம், Pti

படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஜி.எஸ்.டியின் அறிமுக விழா நடைபெறுவதையோட்டி நாடாளுமன்றம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
जीएसटी

பட மூலாதாரம், Pti

படக்குறிப்பு, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திர இந்தியாவில் நான்காவது முறையாக நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உறுப்பினர்கள் நள்ளிரவில் ஒன்று கூடுகிறார்கள்.
जीएस

பட மூலாதாரம், Pti

படக்குறிப்பு, அறிமுக விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. எனினும், ஷரத் பவார் மற்றும் முன்னாள் பிரதமர் தேவ கவுடா இதில் பங்கேற்றனர்.
जीएसटी

பட மூலாதாரம், Pti

படக்குறிப்பு, சரியாக 12 மணிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோதி ஜி.எஸ்.டி அமலாக்கத்தை துவக்கி வைத்தனர்.
जीएसटी

பட மூலாதாரம், Pti

படக்குறிப்பு, ஜி.எஸ்.டி அறிமுக விழாவில் கலந்துகொள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி இதனை புறக்கணித்திருந்ததால் அவர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
जीएसटी

பட மூலாதாரம், Pti

படக்குறிப்பு, நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி அறிமுக விழா நடைபெற்ற தருணத்தில் பா.ஜ.க தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
जीएसटी

பட மூலாதாரம், Pti

படக்குறிப்பு, நாடாளுமன்றம் வெளியே உள்ள காந்தி சிலைக்கு எதிரே தெலங்கானா எம்.பி ஆனந்த் பாஸ்கர் ஜி.எஸ்.டிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்.
जीएसटी

பட மூலாதாரம், Pti

படக்குறிப்பு, அறிமுக விழாவின் போது, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் மற்றும் முன்னாள் நிதித்துறை அமைச்சர் யஷ்வந்த் சிங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
जीएसटी

பட மூலாதாரம், Pti

படக்குறிப்பு, அறிமுக விழாவை தொடர்ந்து, மத்திய அமைச்சர் உமா பாரதியுடன் சுப்பிரமணியன் சுவாமி.