இந்தியாவின் சர்ச்சையை கிளப்பிய ஆடம்பர திருமணம் (புகைப்பட தொகுப்பு)

தென் இந்திய மாநிலமான கர்நாடகாவில், அம்மாநில முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டியின் மகளின் திருமண வைபவம் உலகின் மிக ஆடம்பர திருமணங்களில் ஒன்றாக விமரிசையாக நடந்தேறி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஜனார்த்தன ரெட்டி குடும்பத் திருமணம்

பட மூலாதாரம், Janardhana Reddy Family

படக்குறிப்பு, தென் இந்திய மாநிலமான கர்நாடகாவில், அம்மாநில முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டியின் மகளின் திருமண வைபவம் உலகின் மிக ஆடம்பர திருமணங்களில் ஒன்றாக நடந்தேறியுள்ளது; அத்திருமணத்திற்கு 74 மில்லியன் டாலர்களுக்கும் மேலாக செலவழிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜனார்த்தன ரெட்டி குடும்பத் திருமணம்

பட மூலாதாரம், Kashif Masood

படக்குறிப்பு, இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதது என்று அறிவித்ததிலிருந்து பல மில்லியன் மக்கள் பணப்புழக்க நெருக்கடியால் சிரமப்படும் போது, இந்த திருமணத்துக்கு செய்யப்பட்ட பகட்டான செலவு, மக்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியுள்ளது.
மணப்பெண்ணின் புடவை 170 மில்லியன் மதிப்பிலானது அவர் அணிந்திருக்கும் நகைகள் 900 மில்லியன் மதிப்பிலானது.

பட மூலாதாரம், ஜனார்த்தன ரெட்டி குடும்பத் திருமணம்

படக்குறிப்பு, மணப்பெண்ணின் புடவை 170 மில்லியன் மதிப்பு; அவர் அணிந்திருந்த நகைகள் 900 மில்லியன் மதிப்பிலானது.
23 வயது மணமகன் ராஜீவ் ரெட்டி ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வாரிசு

பட மூலாதாரம், ஜனார்த்தன ரெட்டி குடும்பத் திருமணம்

படக்குறிப்பு, 23 வயது மணமகன் ராஜீவ் ரெட்டி ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வாரிசு
விருந்தினர்களை மகிழ்விக்க நடந்த பலதரப்பட்ட நிகழ்ச்சிகளில் பிரேசில் நாட்டு சம்பா நடனமும் ஒன்று

பட மூலாதாரம், Kashif Masood

படக்குறிப்பு, விருந்தினர்களை மகிழ்விக்க நடந்த பலதரப்பட்ட நிகழ்ச்சிகளில் பிரேசில் நாட்டு சம்பா நடனமும் ஒன்று
ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமணம்

பட மூலாதாரம், kashif masood

படக்குறிப்பு, இத்திருமணத்திற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், திருமணச் செலவுகளை ஆறுமாதத்திற்கு முன்பே முடித்துவிட்டதாகவும் மேலும் சொத்துக்களை அடகு வைத்து திருமணம் நடத்துவதாகவும் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்துள்ளார்.
தங்க முலாம் பூசப்பட்ட திருமண அழைப்பிதழ், பாலிவுட் நட்சத்திரங்களின் நடனம் ஆகியவை தேவையில்லாத ஆடம்பர பகட்டு என பலர் குறை கூறுகின்றனர்.

பட மூலாதாரம், kashif masood

படக்குறிப்பு, தங்க முலாம் பூசப்பட்ட திருமண அழைப்பிதழ், பாலிவுட் நட்சத்திரங்களின் நடனம் ஆகியவை தேவையில்லாத ஆடம்பர பகட்டு என பலர் குறை கூறுகின்றனர்.
பரந்துவிரிந்த பெங்களூரு அரண்மனையில் திருமணச் சடங்குகள் நடப்பதற்காக பழங்கால ஹிந்து கோவில்களை போன்ற தற்காலிக அமைப்புகள் போடப்பட்டது.

பட மூலாதாரம், kashif masood

படக்குறிப்பு, பரந்துவிரிந்த பெங்களூரு அரண்மனையில் திருமணச் சடங்குகள் நடப்பதற்காக பழங்கால ஹிந்து கோவில்களை போன்ற தற்காலிக அமைப்புகள் போடப்பட்டது.
ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமணம்

பட மூலாதாரம், Janardhana Reddy Family

படக்குறிப்பு, 50,000க்கு அதிகமான விருந்தாளிகள் இத்திருமணத்தில் பங்கேற்றனர்; விருந்தாளிகளை அழைத்து வர 2000 டாக்ஸிகள் பயன்படுத்தப்பட்டது; மற்றும் சிறப்பு விருந்தாளிகளை அழைத்து வர 15 தற்காலிக ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டன