Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 மே, 2008 - பிரசுர நேரம் 11:36 ஜிஎம்டி
மின்அஞ்சலாக அனுப்புகஅச்சு வடிவம்
பிரியங்கா நளினி சந்திப்பும் அதனைத் தொடர்ந்த நிகழ்வுகளும்
கணவர் முருகனுடன் நளினி
கணவர் முருகனுடன் நளினி
30/04/2008

விடுதலை கோரி நளினி மனுத்தாக்கல்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு தற்போது சிறையில் இருக்கும் நளினி, தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில், நளினிக்கு முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அது ஆயுட்கால தண்டனையாக குறைக்கப்பட்டது.
வழமையாக ஆயுட்தண்டனைக் குற்றவாளிகள், 14 வருட சிறைவாசத்துக்குப் பின்னர் விடுதலை செய்யப்படுவது வழக்கம். ஆனால் நளினி ஏற்கனவே 17 வருடங்களை சிறையில் கழித்த நிலையில், அவர் தற்போது விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தன்னை விடுதலை செய்யக்கோரி 2005ஆம் ஆண்டு முதல் நளினி அரசாங்கத்தைக் கோரி வந்துள்ளார். ஆனால் அவரது கோரிக்கை கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்துள்ளன. தமது கோரிக்கை கள் நிராகரிக்கப்பட்டது தவறு என்று கூறி, தற்போதைய வழக்கை நளினி தாக்கல் செய்துள்ளார்.
இவை குறித்து நளினியின் சார்பிலான வழக்கறிஞரான துரைசாமி அவர்களின் செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.


15/04/2008

பிரியங்கா- நளினி சந்திப்பு

1991 ஆம் ஆண்டு மே மாதம் மனித வெடி குண்டு மூலம் கொலை செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா வதேரா, தனது தந்தையின் கொலை தொடர்பாக தண்டனை பெற்று தற்போது வேலூர் மத்திய சிறைச்சாலையில் இருக்கும் நளினியை மார்ச் மாதத்தில் சந்தித்து பேசியதாக ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளி யாகின. மார்ச் மாதம் இந்த சந்திப்பு நடைபெற்றது எனபதனை பிரியங்கா வதேராவும் உறுதிப்படுத்தியுள்ளார். இவர்களிடையே நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பான செய்திகளை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

பிபிசி இணைய தளங்கள்
திரையில் சிவராசன், சுபாவின் இறுதிநாட்கள்
04 செப்டம்பர், 2006 | நினைவில் நின்றவை
இவற்றையும் காண்க
மின்அஞ்சலாக அனுப்புகஅச்சு வடிவம்
BBC Copyright Logo^^ மேலே செல்க
முகப்பு|நினைவில் நின்றவை|எம்மைப்பற்றி|வானிலை
BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
உதவி|தகவல் பாதுகாப்பு|எம்மைத் தொடர்புகொள்ள