|
ராஜிவ் காந்தி கொலையும் புலிகளின் நிலைப்பாடும் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
'பாரிய சோக நிகழ்வு' என்கிறார் பாலசிங்கம் இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991 மே மாதம் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து, விடுதலைப்புலிகளுக்கும் இந்தியாவிற்குமான தொடர்புகள் அறுபட்டு, விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்தியா ஒரு பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்தது.
சர்வதேச அரங்கில் இப்போது மேலும் பல நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்துள்ள நிலையில், சமீபத்தில் இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் அளித்த பேட்டியொன்றில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை ஒரு பாரிய துயர சம்பவம் அதற்காக வருந்துகிறோம், இந்தியாவும் இந்திய மக்களும் இந்த சம்பவத்தை பின் தள்ளிவிட்டு, பெருந்தன்மையாக , இலங்கை இனப்பிரச்சினையை புதியதொரு கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இது குறித்து தமிழோசையில் ஒலிபரப்பான செய்திகளை இங்கு தொகுத்துத் தருகிறோம்.
பாலசிங்கத்தின் இந்த பேட்டி குறித்து . எமது செய்தியாளர் எல்.ஆர்.ஜெகதீசன் தயாரித்து வழங்கிய, தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் அடங்கிய பெட்டக நிகழ்ச்சி. பாலசிங்கத்தின் கருத்துக்கள் குறித்து இந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் இந்த கருத்துக்களை வைத்து மட்டும் , விடுதலைப்புலிகள் ராஜிவ் கொலையில் தங்களது ஈடுபாட்டை ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்று கூற முடியாது . இது இந்திய மக்களைக் கவர அவரால் அவ்வப்போது வெளியிடப்பட்டுவரும் கருத்துக்களின் தொடர்ச்சியே என்றார்.
இலங்கையில் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் காரணமாக தமிழ் நாட்டிற்கு வரும் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை பெருகினால், அதன் காரணமாக இலங்கை இனப்பிரச்சினை குறித்த இந்திய மற்றும் தமிழகக் கண்ணோட்டங்கள் மாறாதா என்று கேட்டதற்கு, இலங்கைத் தமிழ் பிரச்சினையில், தமிழ் மக்கள் மீது தமிழகத்தில் ஒரு அனுதாபமும் , ஆதரவும் உண்டு ஆனால் அது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இல்லை என்றார் ராம். பாஜக கருத்து பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் பாலசிங்கம் ஏதோ விடுதலைப்புலிகள் ஒரு சிறிய தவறை செய்து விட்டதைப் போலக் கூறி அதற்கு வருத்தம் தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று கூறியுள்ளார். | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||