டயானாவின் மரணம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து இளவரசர் ஹாரி
தனது தாயாரின் மரணம் தன்னில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பல ஆண்டுகள் வெளியே பேசாமல் இருந்ததற்காக பிரிட்டனின் எலிசபெத் இராணியாரின் பேரனான இளவரசர் ஹாரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
கார் விபத்தில் 1997 ஆம் ஆண்டு அவரது தாயான இளவரசி டயானா இறந்தபோது ஹாரிக்கு பன்னிரண்டு வயது மாத்திரமே.
உளநலம் பாதிக்கப்பட்டவர்கள் உதவி கோருவதை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு தொண்டு நிறுவனத்தை அவர் ஆரம்பித்து வைத்தார்.
தனிப்பட்ட பிரச்சினைகளை மனந்திறந்து பேசுவதன் அவசியம் குறித்து அவர் அங்கு பேசினார்.
இவை குறித்த பிபிசியின் காணொளி.