அகதியாய் அல்லாடும் இரானின் ஒருபாலுறவு முல்லா

உலகின் ஒரே ஷியா முஸ்லிம் நாடு இரான்.

அந்நாட்டு அதியுயர் தலைவர் அலி கொமினி மற்றும் அதிபர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் அனைவருமே முல்லாக்கள் எனப்படும் மத குருமார்கள்.

ஷியா சட்டத்தின்கீழ் ஒருபாலுறவு மரண தண்டனைக்குரிய குற்றம்.

ஆனால் மத குரு ஒருவரே ஒரு பாலுறவாளராக இருந்தால்?

இரானில் முதல் முறையாக தாம் ஒருபாலுறவாளர் என்று வெளிப்படையாக கூறிய ஒரு மதகுரு உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி தற்போது துருக்கியில் அகதியாக இருக்கிறார்.

அவரை சந்தித்தது பிபிசி.