உலகில் 'வயதுவந்த 11 பேரில் ஒருவருக்கு' நீரிழிவு நோய்

உலகில், வயதுவந்த 11பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.

வறிய மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சில நாடுகளின் சுகாதார கட்டமைப்புகளையே திவாலாக்கிவிடும் அளவுக்கு நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.