'அழகான விளையாட்டின் அசிங்கமான முகம்': கத்தார் மீது விமர்சனம்

'அழகான விளையாட்டு ஒன்றின் அசிங்கமான முகம்'.- அப்படித்தான் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்ற மனித உரிமைகள் அமைப்பு, 2022 ஆண்டின் கால்பந்து இறுதிப் போட்டிகளுக்கான ஏற்பாட்டை வர்ணித்துள்ளது.

கண்கவர் கால்பந்து விளையாட்டரங்கத்தை அமைப்பதற்காக கத்தார் அதிகாரிகள், தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல் போன்ற துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் குற்றம்சாட்டியுள்ளது.