இந்திய டாடா நிறுவன முடிவால் பாதிக்கப்படும் பிரிட்டன் தொழிலாளர்கள்
பிரிட்டனில் இருக்கும் தனது எஃகு தொழிற்சாலையை விற்கப்போவதாக டாடா குழுமம் நேற்றிரவு (29-03-2016) அறிவித்தது.
இழப்பைத் தவிர்க்க இந்த முடிவு என்று அது கூறுகிறது.
இதை தடுப்பதற்காக இந்நிறுவனத்தின் தொழிற்சங்கம் அளித்திருந்த செயற்திட்டத்தை டாடா நிர்வாகம் நிராகரித்துவிட்டது.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
அதேசமயம் பிரிட்டிஷ் அரசும் வேல்ஸ் அரசும் இந்தத் தொழிற்சாலையை காப்பாற்ற தம்மால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று கூறியுள்ளன.
வேல்ஸின் தால்போட் துறைமுகத்தின் பொருளாதாரத்தையும் சுமார் நான்காயிரம் தொழிலாளர்களின் வேலைகளையும் நேரடியாக பாதிக்கும் டாடா நிறுவனத்தின் இந்த முடிவின் தாக்கம் குறித்த பிபிசியின் பிரத்யேகக் காணொளி.