சம்போ மீன்களால் ஸீக்கா வைரஸையும் தடுக்க முடியுமா?

ஸீக்கா வைரஸ், இந்த ஆண்டில் சுமார் 40 லட்சம் பேருக்கு தொற்றும் அளவுக்கு மிகவும் ஆபத்தான முறையில் பரவிவருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்கவுள்ள பிரேசில், ஸீக்கா வைரஸினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்று.

அந்தப் போட்டிகளில் தங்களின் வீரர்களை கலந்துகொள்ளாமல் தவிர்க்கக்கூடும் என்று கென்யா இன்று அறிவித்துள்ளது.

ஆனால், எல் சல்வடோரில் சில சமூகங்கள் இந்தப் பிரச்சனைக்கு சுயமாக தீர்வொன்றை வைத்துள்ளதாக நம்புகின்றனர்.