பருவநிலை மாற்றம்: இம்முறை உடன்பாடு எட்டப்படுமா?

பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை தடுக்கும் முயற்சியாக, புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பது தொடர்பில் உடன்பாடு ஒன்றை எட்டுவதற்காக உலகத் தலைவர்கள் பாரிஸில் கூடியுள்ளனர்.

இந்த மாநாடு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று, கரியமில வாயுவை அதிகளவில் வெளியேற்றும் இரண்டாவது பெரிய நாடான அமெரிக்காவின் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

இனி எட்டப்பட இருக்கின்ற உடன்பாடு, வறிய நாடுகளுக்கான உதவிகளையும் உள்ளடக்க வேண்டும் என்று மிகப்பெரிய கரியமில வெளியேற்ற நாடான சீனாவின் அதிபர் க்ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.