கல்வி ஆயுதத்தை கையில் எடுக்கும் ஆப்கானிய சிறுமி
ஆப்கானிஸ்தானில் அரசாங்க படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையில் மோதல்கள் தொடர்ந்து கொண்டிருக்க, தமது வறிய சமூகத்தின் குழந்தைகளுக்கு உதவ விழைகிறார் ஒரு இளம் ஆர்வலர்.
14 வயதே ஆன அசீஸா ரஹிம்ஸாதா சிறார்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் முயற்சியில் ஆற்றுகின்ற பங்களிப்புக்காக, இந்த ஆண்டின் சர்வதேச சிறார்களுக்கான அமைதி விருதுக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.