உகாண்டா: காது கேளாதவர்களுக்கான 'சைகை மொழி தேவாலயம்'
உகாண்டாவில் காவல் துறையினர், செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காது கேளாதவர்களுக்கான சைகை மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் காது கேளாதவர்களுக்கான சங்கம் வலியுறுத்துகிறது.
சமூகத்தின் ஒரு அங்கமாக மாற்றுத்திறனாளிகளை உள்வாங்கும் நோக்கில் பல முயற்சிகளை அங்கு சில குழுக்கள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன.
உகாண்டா திருச்சபையும் காது கேளாதவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை போதகர்களாக உருவாக்கியுள்ளது.