வறுமை முகத்தை மாற்றி முன்னேற்றம் கண்டுவரும் எத்தியோப்பியா
வறிய நாடுகளுக்கு உதவுவதில் உலகத் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும் என்று ஐநாவின் தலைமைச் செயலர் பான் கி மூன் கேட்டுக்கொண்டுள்ளார்.
எத்தியோப்பியாவில் ஆரம்பித்துள்ள அபிவிருத்தி மாநாட்டில் உரையாற்றுகையில் பான் கி மூன் இதனைத் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் பஞ்சத்தை எதிர்கொண்ட எத்தியோப்பியா, தற்போது பாராட்டத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை கண்டுவருகின்றது.