மாணவர் உடற்பருமன் குறைய ஒரு வழி - காணொளி

சிறார்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைப்பதற்கு என்ன செய்யலாம்? சில பிள்ளைகளுக்கு பூங்காவிலோ, தெருவிலோ ஓடி விளையாடுவதற்கு வாய்ப்பே கிடைப்பதில்லை.

ஸ்டிரிலிங்கில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் முன் மாதிரியாக மேற்கொள்ளப்படும் திட்டம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பிரிட்டனின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான உடற்பருமனுக்கும் தீர்வாக அமையலாம்.

இது மிகவும் இலகுவானது. ஒவ்வொரு நாளும் பாடங்கள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, பிள்ளைகள் வெளியே சென்று ஓடுகிறார்கள் அல்லது ஒரு மைலுக்கு நடக்கிறார்கள்.

இதன் பலன்கள் குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.