சிறு வயதிலேயே கணினிக் கல்வி - காணொளி
அடுத்த தலைமுறை நல்ல வேலையை தேடிக்கொள்வதற்கு இனிமேல் வெறுமனே ஆங்கிலமும், கணிதமும், விஞ்ஞானமும் மாத்திரம் கற்றால் போதாது.
இப்போது குழந்தைகள் கணினி அறிவும் குறிப்பாக புரோகிராமிங் அறிவும் பெற்றாக வேண்டியுள்ளது.
பள்ளிக்கூட பாடத்திட்டத்தில், முக்கிய பாடமாக இப்போது கணினி இல்லாவிட்டாலும் கூட, ஹொங்ஹாங்கில் உள்ள பெற்றோர் தமது குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே கணினி கற்பிக்க ஆரம்பிக்க தவறுவதில்லை.
இவை குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.