பாக்கு பழக்கத்துக்கு தய்வான் மக்கள் உயிர்களில் கொடுக்கும் விலை

புகையிலை, மது, கஃபெய்னுக்கு பிறகு, உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் போதை தரும் பொருள் என்றால் அது பாக்குதான். வாய் மணத்துக்காகவும், உற்சாகத்துக்காகவும் மக்கள் பாக்கை வாயிலிட்டு மெல்லும் வழக்கம் உள்ளது. ஆனால் இதற்காக அவர்கள் ஆரோக்கியத்தில் அநியாய விலைகொடுக்க வேண்டியுள்ளது. தாய்வானில் பாக்கு பழக்கத்தைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.