உவர் மண்ணில் விளையும் உருளைக்கிழங்கு வகை - காணொளி

உலக உணவு தொழில்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், நெதர்லாந்தைச் சேர்ந்த சில ஆய்வாளர்கள் உவர் மண்ணில் விளையும் உருளைக்கிழங்கு வகையை கண்டுபிடித்துள்ளனர்.

பெருமளவு கடலோர நிலங்கள் உவர் நிலங்களாக மாறிவரும் சூழ்நிலையில், உவர் நிலங்களில் பயிர்செய்வதற்கான தாவர வகைகளை கண்டுபிடிப்பதில் ஆய்வாளர்கள் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

உவர் நிலங்களை விவசாயத்துக்காக சீர்செய்ய அரசாங்கங்கள் வருடாந்தம் லட்சக்கணக்கான டாலர்களை செலவிடுகின்றன.

இந்த நிலையில், நெதர்லாந்து ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உருளைக்கிழங்கு வகைகள் ஒரு சாதனையாக பேசப்படுகிறது.

இவை குறித்த பிபிசியின் ஒரு காணொளி.