வன விலங்கு புகைப்படப் போட்டிக்கு வந்த படங்கள் - படத்தொகுப்பு

வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதுக்காக, பொதுமக்கள் இணையம் மூலம் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் புகைப்படங்களில் ஒரு சில படங்களின் தொகுப்பு

மஞ்சள் கழுத்து கொண்ட இந்த எலியைப் படமெடுத்தவர் ஜெர்மனியின் புகைப்படக் கலைஞர் கார்ல்சன் ப்ரான்
படக்குறிப்பு, 'இந்த ஆண்டு வன விலங்கின புகைப்படக் கலைஞர்' என்ற புகைப்படப்போட்டியில் பொதுமக்கள் இணையம் மூலமாக உலகெங்கிலிருந்தும் வாக்களித்து வெற்றி பெறுபவரைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்தப் படத்தில் மஞ்சள் கழுத்து கொண்ட இந்த எலியைப் படமெடுத்தவர் ஜெர்மனியின் புகைப்படக் கலைஞர் கார்ல்சன் ப்ரான்
இந்தப் படத்தில் ஒரு நீர்நிலையில் இருக்கும் சிவப்பு நிற கங்காரு. எடுத்தவர் தியோ அல்லொப்ஸ்
படக்குறிப்பு, தேர்வுக்குழுவினரால் முன்னதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 படங்களிலிருந்து வெற்றி பெறும் விருது, பொதுமக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும். இந்தப் போட்டியில் ஏறக்குறைய 100 நாடுகளிலிருந்து 41,000 புகைப்படங்கள் அனுப்பப்பட்டன. இந்தப் படத்தில் ஒரு நீர்நிலையில் இருக்கும் சிவப்பு நிற கங்காரு. எடுத்தவர் ஜெர்மனியின் தியோ அல்லொப்ஸ்
தாண்டிக் குதிக்கும் ஜெண்டூ பெங்குவின் --படமெடுத்தவர் அமெரிக்கப் புகைப்படக் கலைஞர் பால் சோல்டர்ஸ்
படக்குறிப்பு, தாண்டிக் குதிக்கும் ஜெண்டூ பெங்குவின் --படமெடுத்தவர் அமெரிக்கப் புகைப்படக் கலைஞர் பால் சோல்டர்ஸ்
சோம்பல் முறிக்கும் சிங்கக்குட்டி - படம் எடுத்தவர் ஜெர்மனியின் ஸ்டீபன் டுவெங்லர்
படக்குறிப்பு, சோம்பல் முறிக்கும் சிங்கக்குட்டி - படம் எடுத்தவர் ஜெர்மனியின் ஸ்டீபன் டுவெங்லர்
இந்தப் புகைப்படத்தில் பறக்கும் ஆந்தை.. இந்தப் படத்தை எடுத்தவர் கனடாவின் ஹென்ரிக் நில்ஸன்
படக்குறிப்பு, இந்த விருதுக்கான இணைய வாக்கெடுப்பு செப்டம்பர் 5ம் தேதி முடிகிறது. வெற்றி பெற்ற புகைப்படம் அக்டோபரில் அறிவிக்கப்படும். இந்தப் புகைப்படத்தில் பறக்கும் ஆந்தை.. இந்தப் படத்தை எடுத்தவர் கனடாவின் ஹென்ரிக் நில்ஸன்
பேஸ்புக் அப்டேட் ! புகைப்படம் மார்சல் வான் ஊஸ்ட்
படக்குறிப்பு, பேஸ்புக் அப்டேட் என்ற இந்த படத்தை எடுத்தவர் மார்சல் வான் ஊஸ்ட் . இந்தப் படத்தையும் , விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிற படங்கள் அனைத்தையும், மக்கள் தேர்வு விருது இணைய தளத்தில் காணலாம். இணைய தள முகவரி www.wildlifephotographeroftheyear.com
இருளின் தாடைகள் என்ற இந்தப் படத்தை எடுத்தவர் ஸ்பெயின் புகைப்படக்கலைஞர் யுவான் ஜீசஸ் கொன்சாலேஸ் அஹுமடா
படக்குறிப்பு, இருளின் தாடைகள் என்ற இந்தப் படத்தை எடுத்தவர் ஸ்பெயின் புகைப்படக்கலைஞர் யுவான் ஜீசஸ் கொன்சாலேஸ் அஹுமடா
'பழைய ஆடைகள்' என்ற இந்தப் படத்தை எடுத்தவர் மெக்ஸிகோ புகைப்படக்கலைஞர் க்லாடியோ கோண்ட்ரெராச் கூப்
படக்குறிப்பு, 'பழைய ஆடைகள்' என்ற இந்தப் படத்தை எடுத்தவர் மெக்ஸிகோ புகைப்படக்கலைஞர் க்லாடியோ கோண்ட்ரெராச் கூப்
நட்சத்திரத்தை பார்ப்பவரால் அதிர்ச்சி என்ற இந்த படத்தை எடுத்தவர் பிரிட்டனின் ஜெனிபர் ஜோ ஸ்டோக்
படக்குறிப்பு, 'நட்சத்திரத்தை பார்ப்பவரால் அதிர்ச்சி' என்ற இந்த படத்தை எடுத்தவர் பிரிட்டனின் ஜெனிபர் ஜோ ஸ்டோக்
'பிரப்புடாங்கா' என்ற ஒருவகை மீனினம் படம் எடுத்தவர் அட்ரியானா பாஸ்க் ( அமெரிக்கா)
படக்குறிப்பு, இந்தப் போட்டியில் வெல்லும் முதல் ஐந்து புகைப்படங்கள் லண்டனின் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் அக்டோபர் 24ம் தேதி காட்சிக்கு வைக்கப்படும். அதன் பின்னர் அது பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படும். 'பிரப்புடாங்கா' என்ற ஒருவகை மீனினம் படம் எடுத்தவர் அட்ரியானா பாஸ்க் ( அமெரிக்கா)