அன்றாட வாழ்க்கை -- உயரத்திலிருந்து ஒரு பார்வை (படத்தொகுப்பு)

வாழ்க்கையில் மக்கள் செய்யும் அன்றாட வேலைகளை பாரிஸ் புகைப்படக் கலைஞர் ப்ளோரியன் பூடெனோன் உயரத்திலிருந்து எடுத்த சில படங்களின் தொகுப்பு

மக்கள் தங்களுக்குப் பிடித்த அன்றாட வேலைகளில் ஈடுபடும் காட்சிகளை பாரிஸ் புகைப்படக் கலைஞர் ப்ளோரியன் பூடெனோன் உயரத்திலிருந்து படமெடுத்திருக்கிறார்.
படக்குறிப்பு, மக்கள் தங்களுக்குப் பிடித்த அன்றாட வேலைகளில் ஈடுபடும் காட்சிகளை பாரிஸ் புகைப்படக் கலைஞர் ப்ளோரியன் பூடெனோன் உயரத்திலிருந்து படமெடுத்திருக்கிறார்.
காய்கறி நறுக்குவதிலிருந்து கடற்கரையில் படுத்திருப்பது மற்றும் ட்ரம் வாசிப்பது போன்ற அனைத்து தருணங்களும் இவர் எடுத்த புகைப்படங்களில் அடக்கம்
படக்குறிப்பு, காய்கறி நறுக்குவதிலிருந்து கடற்கரையில் படுத்திருப்பது மற்றும் ட்ரம் வாசிப்பது போன்ற அனைத்து தருணங்களும் இவர் எடுத்த புகைப்படங்களில் அடக்கம்
புத்தகம் படிக்கும் ஒருவர்
படக்குறிப்பு, "ஒரு மாடல் அழகியிடமிருந்து எனக்கு இந்த யோசனை வந்தது. அவர் சோபாவில் உட்கார்ந்திருந்தார். நான் அருகே இருந்த ஒரு ஸ்டூலில் ஏறி அவரைப் படமெடுத்தேன் " என்கிறார் பூடெனான்
வீட்டில் ஓவியம் தீட்டு ஒருவர்
படக்குறிப்பு, "இந்தப் படங்கள் எனக்குப் பிடித்தன. உடனே நான் இது போல ஒரு கோணத்தில் முழுமையான ஒரு புகைப்படக் கொத்தை எடுத்தால் என்ன என்று தோன்றியது. வீட்டின் கூரையில் உள்ள ஒரு பூச்சி நாம் எப்படி சமைக்கிறோம், எப்படி தூங்குகிறோம் என்பதையெல்லாம் எப்படிப் பார்க்கும் என்று யோசித்தேன். உடனே இந்த யோசனை எனக்குத் தோன்றியது" என்கிறார் அவர்
சைக்கிள் ரிப்பேர் செய்யும் ஒருவர்
படக்குறிப்பு, பிறகு மக்களுக்குப் பிடித்த நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்தார் பூடெனான். இதற்காக தனது புகைப்படங்களுக்குப் போஸ் கொடுக்க விருப்பமானவர்களையும் அழைத்தார் அவர்.
"முதலில் என் நண்பர்களிடம் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான தருணம் என்னவென்று கேட்டேன். பின்னர் அவர்கள் அந்த வேலையைச் செய்யும்போது அதைப் படமெடுத்தேன். அதன் பின்னர் சமூக ஊடங்களினூடாக என் தொடர்புகளிடம் இது போல மேலும் உதவுமாறு கேட்டேன்" என்கிறார் அவர்.
படக்குறிப்பு, "முதலில் என் நண்பர்களிடம் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான தருணம் என்னவென்று கேட்டேன். பின்னர் அவர்கள் அந்த வேலையைச் செய்யும்போது அதைப் படமெடுத்தேன். அதன் பின்னர் சமூக ஊடங்களினூடாக என் தொடர்புகளிடம் இது போல மேலும் உதவுமாறு கேட்டேன்" என்கிறார் அவர்.
தனக்கு இந்த உயரத்திலிருந்து படம் பிடிக்க விசேடமான ஏற்பாடு எதுவும் தேவையில்லை ஏனென்றால் தான் உயரமாக இருப்பதே போதுமானதாக இருக்கிறது என்கிறார் பூடெனான்
படக்குறிப்பு, தனக்கு இந்த உயரத்திலிருந்து படம் பிடிக்க விசேடமான ஏற்பாடு எதுவும் தேவையில்லை ஏனென்றால் தான் உயரமாக இருப்பதே போதுமானதாக இருக்கிறது என்கிறார் பூடெனான்
இந்த எல்லாப் படங்களுமே படத்துக்கு போஸ் கொடுக்க முன்வந்தவர்களின் வீடுகளில் எடுக்கப்பட்டவைதான்.
படக்குறிப்பு, இந்த எல்லாப் படங்களுமே படத்துக்கு போஸ் கொடுக்க முன்வந்தவர்களின் வீடுகளில் எடுக்கப்பட்டவைதான்.
கடற்கரையில் புத்தகம் படிக்கும் ஒருவர்
படக்குறிப்பு, அவர்கள் தங்கள் ஹாபியை , அல்லது தனிமையான ஒரு தருணத்தை படமெடுக்க உடன்பட்டார்கள், என்கிறார் பூடெனான்