சிதறிக் கிடக்கும் சிதிலங்கள்

உக்ரைன் வான்பரப்பில், வியாழக்கிழமை(17.7.14) அன்று, தாக்குதலுக்கு இலக்காகி, வெடித்துச் சிதறிய மலேசிய விமானத்தின் சிதிலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது

நேற்று( 17.7.14) மலேசியன் ஏர்லைன்ஸின் போயிங் 777 ரக விமானம், உக்ரைனின் டோனியேஸ்க் பிரதேசத்திலுள்ள, கிராபோவோ எனும் இடத்தில் நொறுங்கி விழுந்தது. இது குறித்து ஒரு சர்வதேச விசாரணைத் தேவை என உலகக் தலைவர்கள் கோரியுள்ளனர். அந்த விமானத்தில் இருந்த 298 பேரும் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு, ரஷ்யாவே காரணம் என்று உக்ரைன் கூறுகிறது. இச்சம்பவத்தை அடுத்து உக்ரைன்-ரஷ்யா இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது.
படக்குறிப்பு, நேற்று( 17.7.14) மலேசியன் ஏர்லைன்ஸின் போயிங் 777 ரக விமானம், உக்ரைனின் டோனியேஸ்க் பிரதேசத்திலுள்ள, கிராபோவோ எனும் இடத்தில் நொறுங்கி விழுந்தது. இது குறித்து ஒரு சர்வதேச விசாரணைத் தேவை என உலகக் தலைவர்கள் கோரியுள்ளனர். அந்த விமானத்தில் இருந்த 298 பேரும் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு, ரஷ்யாவே காரணம் என்று உக்ரைன் கூறுகிறது. இச்சம்பவத்தை அடுத்து உக்ரைன்-ரஷ்யா இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது.
நொறுகி விழுந்த இந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம் எச் 17ல் இருந்த 298 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில், சிதறிக் கிடக்கும் சிதிலங்கள்.
படக்குறிப்பு, நொறுகி விழுந்த இந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம் எச் 17ல் இருந்த 298 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில், சிதறிக் கிடக்கும் சிதிலங்கள்.
இந்தச் சிதிலங்களில் கை கடிகாரம் ஒன்றும், பிரேஸ்லெட் ஒன்றும் அடங்கும். மேலும் உடற்பகுதிகள், உடமைகள் ஆகியவற்றை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ரோஸ்பைன் எனும் கிராமத்துக்கு அருகில், அந்த விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் தேடுதல் நடவடிக்கையில், பணிக் கடமையில் இல்லாத காவல்துறையினர், நிலக்கரிச் சுரங்க ஊழியர்கள் உட்பட பலர் ஈடுபட்டுள்ளனர். அந்த கிராமத்துக்கு மேலாகத்தான் அந்த விமானம் வெடித்து, எரிந்து, நொறுங்கி விழுந்தது.
படக்குறிப்பு, இந்தச் சிதிலங்களில் கை கடிகாரம் ஒன்றும், பிரேஸ்லெட் ஒன்றும் அடங்கும். மேலும் உடற்பகுதிகள், உடமைகள் ஆகியவற்றை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ரோஸ்பைன் எனும் கிராமத்துக்கு அருகில், அந்த விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் தேடுதல் நடவடிக்கையில், பணிக் கடமையில் இல்லாத காவல்துறையினர், நிலக்கரிச் சுரங்க ஊழியர்கள் உட்பட பலர் ஈடுபட்டுள்ளனர். அந்த கிராமத்துக்கு மேலாகத்தான் அந்த விமானம் வெடித்து, எரிந்து, நொறுங்கி விழுந்தது.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில், நொறுங்கி விழுந்த விமானத்தில் இருந்தவர்களின் உடல்களை தேடும் பணி தொடருகிறது. அந்த விமானத்தின் முக்கிய சமிஞ்கைகள் மற்றும் உரையாடல்கள் அடங்கிய கறுப்புப் பெட்டிகளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சமபவத்துக்கு ரஷ்யாவும், உக்ரைனும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
படக்குறிப்பு, உக்ரைனின் கிழக்குப் பகுதியில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில், நொறுங்கி விழுந்த விமானத்தில் இருந்தவர்களின் உடல்களை தேடும் பணி தொடருகிறது. அந்த விமானத்தின் முக்கிய சமிஞ்கைகள் மற்றும் உரையாடல்கள் அடங்கிய கறுப்புப் பெட்டிகளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சமபவத்துக்கு ரஷ்யாவும், உக்ரைனும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மாஸ்கோவிலுள்ள, டச்சுத் தூதரகத்துகு வெளியே, அடையாளம் தெரியாத ஒருவர் உயிரிழந்தவர்களுக்காக மலரும், பொம்மையும் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அந்த விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருந்தது.
படக்குறிப்பு, மாஸ்கோவிலுள்ள, டச்சுத் தூதரகத்துகு வெளியே, அடையாளம் தெரியாத ஒருவர் உயிரிழந்தவர்களுக்காக மலரும், பொம்மையும் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அந்த விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருந்தது.
விமானம் வெடித்துச் சிதறி விழுந்த கிராபோவோ கிராமத்துக்கு செல்லும் பாதையைக் காட்டும் வழிகாட்டி. அந்த வழிகாட்டியின் அருகிலும் சிதிலங்கள் காணப்படுகின்றன.
படக்குறிப்பு, விமானம் வெடித்துச் சிதறி விழுந்த கிராபோவோ கிராமத்துக்கு செல்லும் பாதையைக் காட்டும் வழிகாட்டி. அந்த வழிகாட்டியின் அருகிலும் சிதிலங்கள் காணப்படுகின்றன.
அந்த விமானத்தில் பயணித்தவர்களின், பெட்டிகள் மற்றும் உடமைகள், டோனியேஸ்க் பிரதேசத்தின் கிராபோவோ கிராமத்தின் பல பகுதிகளில் சிதறிக் கிடக்கின்றன.
படக்குறிப்பு, அந்த விமானத்தில் பயணித்தவர்களின், பெட்டிகள் மற்றும் உடமைகள், டோனியேஸ்க் பிரதேசத்தின் கிராபோவோ கிராமத்தின் பல பகுதிகளில் சிதறிக் கிடக்கின்றன.