பாலத்தீனர்களின் பரம எதிரி - படங்களில்

இஸ்ரேலில் பெரும் கதாநாயகனாகவும், பாலத்தீனத்தில் பெரும் வில்லனாகவும் பார்க்கப்பட்ட ஏரியல் ஷரோனின் சர்ச்சைகள் மிகுந்த வாழ்க்கை - படங்களில்

இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் தனது 85 ஆவது வயதில் காலமானார். 2006 ஆம் ஆண்டு அவரது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் கோமா நிலைக்குச் சென்றார். அதன் பிறகு அவர் அதிலிருந்து மீளவே இல்லை. இறுதியாக சிறுநீரகம் உட்பட பல உறுப்புகள் செயலிழந்தன.
படக்குறிப்பு, இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் தனது 85 ஆவது வயதில் காலமானார். 2006 ஆம் ஆண்டு அவரது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் கோமா நிலைக்குச் சென்றார். அதன் பிறகு அவர் அதிலிருந்து மீளவே இல்லை. இறுதியாக சிறுநீரகம் உட்பட பல உறுப்புகள் செயலிழந்தன.
பாலத்தீன் பிரிட்டிஷாரிடம் இருந்தபோது ஷரோன் 1928 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது பெற்றோர் ரஷ்யாவிலிருந்து அங்கு குடியேறியவர்கள். 1948-49 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரில் அவர் பங்கெடுத்தார். 1950- களில் பல இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமையும் ஏற்றார். 1967 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆறுநாள் யுத்தத்தில் ஒரு படையணிக்கு அவர் தலைவராக இருந்தார்.
படக்குறிப்பு, பாலத்தீன் பிரிட்டிஷாரிடம் இருந்தபோது ஷரோன் 1928 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது பெற்றோர் ரஷ்யாவிலிருந்து அங்கு குடியேறியவர்கள். 1948-49 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரில் அவர் பங்கெடுத்தார். 1950- களில் பல இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமையும் ஏற்றார். 1967 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆறுநாள் யுத்தத்தில் ஒரு படையணிக்கு அவர் தலைவராக இருந்தார்.
1970 ஆம் ஆண்டு ஷரோன்(மத்தியில் உள்ளவர்) பாலத்தீன விடுதலை இராணுவத்தின் போராளிகளை ஒழித்துக்கட்டும் முகமாக, 2000 பாலத்தீன வீடுகள் அழிக்கப்படுவதை முன்னின்று நடத்தினார். இதையடுத்து அவருக்கு புல்டோசன் எனும் புனைப் பெயர் ஏற்பட்டது.
படக்குறிப்பு, 1970 ஆம் ஆண்டு ஷரோன்(மத்தியில் உள்ளவர்) பாலத்தீன விடுதலை இராணுவத்தின் போராளிகளை ஒழித்துக்கட்டும் முகமாக, 2000 பாலத்தீன வீடுகள் அழிக்கப்படுவதை முன்னின்று நடத்தினார். இதையடுத்து அவருக்கு புல்டோசன் எனும் புனைப் பெயர் ஏற்பட்டது.
1973 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்ததில் அவர் பணியாற்றினார், எனினும் அதன் பிறகு இராணுவத்திலிருந்து விலகி லிகுட் கட்சியைத் தொடங்கினார். மெனஷம் பெகினின் அமைச்சரவையில் விவசாய அமைச்சராக இருந்த அவர், 1967 ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனப் பகுதிகளில், இஸ்ரேலியர்களை குடியமர்த்தும் நடவடிக்கைகளை ஊக்குவித்தார்.
படக்குறிப்பு, 1973 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்ததில் அவர் பணியாற்றினார், எனினும் அதன் பிறகு இராணுவத்திலிருந்து விலகி லிகுட் கட்சியைத் தொடங்கினார். மெனஷம் பெகினின் அமைச்சரவையில் விவசாய அமைச்சராக இருந்த அவர், 1967 ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனப் பகுதிகளில், இஸ்ரேலியர்களை குடியமர்த்தும் நடவடிக்கைகளை ஊக்குவித்தார்.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சராக ஷரோன் இருந்தபோது, 1982 ஆம் ஆண்டு லெபனான் மீதான நடவடிக்கையை வழிநடத்தினார். அங்கிருந்த முகாம்களில் பாலத்தீன விடுதலைப் போராளிகள் தங்கியிருந்தனர் என்று அவர் சந்தேகித்தார்.
படக்குறிப்பு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சராக ஷரோன் இருந்தபோது, 1982 ஆம் ஆண்டு லெபனான் மீதான நடவடிக்கையை வழிநடத்தினார். அங்கிருந்த முகாம்களில் பாலத்தீன விடுதலைப் போராளிகள் தங்கியிருந்தனர் என்று அவர் சந்தேகித்தார்.
அந்தத் தாக்குதலில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து பாலத்தீனியர்கள் அவரை கசாப்புக் கடைக்காரர் என்று அழைத்தனர். 1983 ஆம் ஆண்டு ஆணையம் ஒன்று இந்தக் கொலைகளுக்கு அவர் மறைமுகமாக பொறுப்பு என்று கண்டறிந்ததை அடுத்து அவர் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார்.
படக்குறிப்பு, அந்தத் தாக்குதலில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து பாலத்தீனியர்கள் அவரை கசாப்புக் கடைக்காரர் என்று அழைத்தனர். 1983 ஆம் ஆண்டு ஆணையம் ஒன்று இந்தக் கொலைகளுக்கு அவர் மறைமுகமாக பொறுப்பு என்று கண்டறிந்ததை அடுத்து அவர் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார்.
ஷரோனுக்கு அவரது இரண்டாவது மனைவி லிலி மற்றும் மகன்கள் ஆம்ரி, கிலாட் ஆகியோர் ஆதரவாக இருந்தனர். அவரது முதல் மனைவியும் லிலியின் சகோதரியுமான மார்கலிட் 1962 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் காலமானார்.
படக்குறிப்பு, ஷரோனுக்கு அவரது இரண்டாவது மனைவி லிலி மற்றும் மகன்கள் ஆம்ரி, கிலாட் ஆகியோர் ஆதரவாக இருந்தனர். அவரது முதல் மனைவியும் லிலியின் சகோதரியுமான மார்கலிட் 1962 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் காலமானார்.
பதவியிலிருந்து விலகிய பிறகு பல ஆண்டுகள் அவர் அரசியலிலிருந்து நேரடியாக பங்கேற்காமல் இருந்தாலும் பல அமைச்சகங்களை சூத்திரதாரியாக இருந்து நடத்திவந்தார். என்றாலும் தனது பழைய ஆளுமையை அவரால் அடைய முடியவில்லை. எனினும் 1990 களில் அவர் மீண்டும் எழுச்சி பெற்றார். 1999 ஆம் ஆண்டு லிகுட் கட்சியின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.
படக்குறிப்பு, பதவியிலிருந்து விலகிய பிறகு பல ஆண்டுகள் அவர் அரசியலிலிருந்து நேரடியாக பங்கேற்காமல் இருந்தாலும் பல அமைச்சகங்களை சூத்திரதாரியாக இருந்து நடத்திவந்தார். என்றாலும் தனது பழைய ஆளுமையை அவரால் அடைய முடியவில்லை. எனினும் 1990 களில் அவர் மீண்டும் எழுச்சி பெற்றார். 1999 ஆம் ஆண்டு லிகுட் கட்சியின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.
இஸ்ரேலை பாதுகாக்க வேண்டுமென்றால் தந்திரோபாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கருதி, காசா மற்றும் மேற்குக்கரைப் பகுதியிலுள்ள சிறு பகுதிகளிலிருந்து சில ஆக்கிரமிப்பாளர்களை விலக்கிக் கொண்டார். இது சில ஆதரவாளர்களை கோபமூட்டியது, அதன் காரணமாக அவரது பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.
படக்குறிப்பு, இஸ்ரேலை பாதுகாக்க வேண்டுமென்றால் தந்திரோபாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கருதி, காசா மற்றும் மேற்குக்கரைப் பகுதியிலுள்ள சிறு பகுதிகளிலிருந்து சில ஆக்கிரமிப்பாளர்களை விலக்கிக் கொண்டார். இது சில ஆதரவாளர்களை கோபமூட்டியது, அதன் காரணமாக அவரது பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.
கடந்த 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் யூதர்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவருக்குமே புனிதமான மலைப் பகுதி ஆலயத்துக்கு அவர் சென்றது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இது பாலத்தீன கிளர்ச்சியை மீண்டும் தலைதூக்க வழி செய்தது.
படக்குறிப்பு, கடந்த 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் யூதர்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவருக்குமே புனிதமான மலைப் பகுதி ஆலயத்துக்கு அவர் சென்றது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இது பாலத்தீன கிளர்ச்சியை மீண்டும் தலைதூக்க வழி செய்தது.
பாலத்தீனர்களால் நடத்தப்படும் தாக்குதலை ஒடுக்குவேன் எனும் வாக்குறுதியுடன் அவர் 2001 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனாலும் வன்முறைகள் தொடர்ந்தன, அமைதிப் பேச்சுகள் தடைப்பட்டன. இதையடுத்து பாலத்தீனத் தலைவர்களின் நடவடிக்கைகள் குறித்து அவர் பொறுமை இழந்தார்.
படக்குறிப்பு, பாலத்தீனர்களால் நடத்தப்படும் தாக்குதலை ஒடுக்குவேன் எனும் வாக்குறுதியுடன் அவர் 2001 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனாலும் வன்முறைகள் தொடர்ந்தன, அமைதிப் பேச்சுகள் தடைப்பட்டன. இதையடுத்து பாலத்தீனத் தலைவர்களின் நடவடிக்கைகள் குறித்து அவர் பொறுமை இழந்தார்.
இதையடுத்து லிகுட் கட்சி பிளவுபட்டது. ஷரோன் அதிலிருந்து விலகி கடிமா எனும் புதுக்கட்சியைத் தொடங்கினார். இதன் மூலம் நாட்டின் அரசியலில் ஆளுமை செலுத்தலாம் என்று அவர் நம்பினார். ஆனால் அவரது உடல்நிலை அதற்கு தடையாக இருந்தது. அவரது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டது. இதையடுத்து அவர் கோமா நிலைக்குச் சென்றார்.
படக்குறிப்பு, இதையடுத்து லிகுட் கட்சி பிளவுபட்டது. ஷரோன் அதிலிருந்து விலகி கடிமா எனும் புதுக்கட்சியைத் தொடங்கினார். இதன் மூலம் நாட்டின் அரசியலில் ஆளுமை செலுத்தலாம் என்று அவர் நம்பினார். ஆனால் அவரது உடல்நிலை அதற்கு தடையாக இருந்தது. அவரது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டது. இதையடுத்து அவர் கோமா நிலைக்குச் சென்றார்.