
ஹிட்லர் முதல் முதலில் பதவிக்கு வந்து இன்றொடு எண்பது ஆண்டுகள் ஆகும் நிலையில், ஜெர்மானிய அரச தலைவி ஏங்கெலா மெர்கல், ''மக்கள் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும், சகிப்புத் தன்மையையும் பேண விழிப்பாக இருக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
பெரும்பான்மையான ஜெர்மானியர்கள், நாஜிக்களை சகித்துக் கொண்ட காரணத்தால்தான் ஹிட்லர் தான் பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே ஜனநாயகத்தை அழிக்க முடிந்தது என்று - ஹிட்லர் பதவிக்கு வந்ததை குறிக்கும் நிகழ்வில் பேசுகையில் மெர்க்கல் தெரிவித்தார்.
கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு மூலமாக ஹிட்லர் பதவிக்கு வந்த விடயம் நினைவுகூரப்பட்டது.







