"என்றென்றும் காதலர்" தினம்: மணம் முடிக்கத் துடிக்கும் சீன காதல் ஜோடிகள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 4 ஜனவரி, 2013 - 10:35 ஜிஎம்டி
"என்றென்றும் காதலர்" தினத்தில் மணம் முடித்த காதல் ஜோடி ஒன்று

"என்றென்றும் காதலர்" தினத்தில் மணம் முடித்த காதல் ஜோடி ஒன்று

சீனாவில் ஏராளமான காதல் ஜோடிகள் திருமணம் செய்துகொள்வதற்காக பதிவாளர் அலுவலகங்களுக்கு கூட்டங்கூட்டமாக சென்றுகொண்டிருக்கின்றனர்.

4-1-2103 வெள்ளிக்கிழமையை "என்றென்றும் காதலர்" தினம் என்று அவர்கள் குறிக்கிறார்கள்.

சீனாவின் மேன்டரின் மொழியில் "ஜனவரி நான்காம் தேதி இரண்டாயிரத்து பதிமூன்று" என்பதைச் சொல்லும்போது, "என் வாழ்நாள் முழுக்க உன்னை நேசிப்பேன்" என்ற அர்த்தம் கொண்ட வாசகமாக அது ஒலிக்கிறது அவர்கள் இத்தினத்தை அப்படிச் சொல்கிறார்கள்.

வெள்ளியன்று ஆயிரக்கணக்கான காதல் ஜோடிகள் பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

ஆனாலும் பல சீன நகரங்களில் பதிவாளர் அலுவலகங்கள் முன்பு காதல் ஜோடிகள் கூட்டமாகவும் வரிசையிலும் காத்து நிற்பதை காண முடிந்தது.

BBC © 2014வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.

]]>