பிரிட்டன் அரசர் சார்ல்ஸை விட பிரதமர் ரிஷி சூனக் பணக்காரரா ?
பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலை மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு, லிஸ் டிரஸ் பிரதமரானார். இருப்பினும், பதவிக்கு வந்த 45 நாட்களிலேயே லிஸ் டிரஸ் பதவி விலகினார்.
அதைத்தொடர்ந்து, ரிஷி சூனக் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்வானார்.
தற்போது பிரிட்டன் பிரதமராக பதவி வகிக்கும் ரிஷி சூனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு $840 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கரீபியனில் உள்ள 16 தனியார் தீவுகளின் விலைக்கு சமம்.
அவர், பிரிட்டன் அரசர் சார்ல்ஸை விட பணக்காரர் என்று சொல்லப்படுவது உண்மையா? இந்த காணொளியில் விடை கிடைக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்