இம்ரான் கான்: பாகிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கேப்டனின் அரசியல் பயணம்

காணொளிக் குறிப்பு, இம்ரான் கான்: பாகிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கேப்டனின் அரசியல் பயணம்

1987 உலக கோப்பைக்குப் பிறகு இம்ரான் கான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தபோது, அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் ஜியா-உல்-ஹக், அவரை மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பச் சொன்னார். சில மாதங்களுக்குப் பிறகு இம்ரான் ஓய்வு பெறும் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

இதேபோல், ஜெனரல் ஜியா, அவரை அரசியலில் சேருமாறு பின்னர் கேட்டுக் கொண்டார். ஆனால், இம்ரான் கான் அதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பும் இதேபோன்ற அழைப்பை விடுத்தார். ஆனால், அரசியலில் சேருவதில்லை என்ற தனது முடிவில் கேப்டன் உறுதியாக இருந்தார்.

ஆனால், இறுதியில் இம்ரான் கான் அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.

முப்படை உளவு அமைப்பு ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவரான ஜெனரல் ஹமீத் குல்லின் ஜிஹாதி சித்தாந்தத்தை இம்ரான் கான் விரும்பினார்.

அவருக்கு வாய்ப்பு கிடைத்ததும், ஜெனரல் ஹமீத் குல் மற்றும் முகமது அலி துரானியின் சமூகக் கருத்தியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 'பாஸ்பான்' என்ற அமைப்பில் இம்ரான் சேர்ந்தார். ஹமீத் குல் மற்றும் முகமது அலி துரானியும், இதை ஒரு 'pressure group' அல்லது 'மூன்றாவது சக்தி' என்று அழைத்தனர்.

அரசியல்வாதிகள் தங்கள் சொந்த லாபங்களுக்காக நாட்டை சூறையாடுகிறார்கள் மற்றும் அவர்களின் பரஸ்பர சண்டையில் மக்கள் நசுக்கப்படுகின்றனர் என்பதால், இது பாகிஸ்தானுக்கு மிகவும் தேவையான ஒன்று அவர்கள் நினைத்தனர்.

விரிவாக இந்த காணொளியை பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: