பாஃப்தா முதல் இடிந்த வீட்டில் பியானோ வாசிக்கும் சிப்பாய் வரை - கடந்த வார புகைப்படங்கள்

பாஃப்தா முதல் இடிந்த வீட்டில் பியானோ வாசிக்கும் சிப்பாய் வரை - கடந்த வார புகைப்படங்கள்

72ஆவது பாஃப்தா விருது நிகழ்ச்சி லண்டனில் உள்ள ராயல் ஆல்பெட் ஹாலில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிக்காக இருக்கைகளை சரி செய்கிறார் நாடக கலைஞர் ஒருவர்.

பட மூலாதாரம், HENRY NICHOLLS / REUTERS

படக்குறிப்பு, 72ஆவது பாஃப்தா விருது நிகழ்ச்சி லண்டனில் உள்ள ராயல் ஆல்பெட் ஹாலில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிக்காக இருக்கைகளை சரி செய்கிறார் நாடக கலைஞர் ஒருவர்.
செல்ல பிராணிகளுக்கான 16ஆவது நியூயார்க் ஃபேஷன் ஷோவுக்காக அலங்கரிக்கப்பட்ட நாய்.

பட மூலாதாரம், JOHANNES EISELE / AFP

படக்குறிப்பு, செல்ல பிராணிகளுக்கான 16வது நியூயார்க் ஃபேஷன் ஷோவுக்காக அலங்கரிக்கப்பட்ட நாய்.
திருநங்கை மாடலான ஜெசிக்கா கோர்டெக்ஸ் நியூயார்க் ஃபேஷன் வாரத்துக்காக சிகை அலங்காரம் செய்து கொண்டபோது.

பட மூலாதாரம், ANDREW KELLY / REUTERS

படக்குறிப்பு, திருநங்கை மாடலான ஜெசிக்கா கோர்டெக்ஸ் நியூயார்க் ஃபேஷன் வாரத்துக்காக சிகை அலங்காரம் செய்து கொண்டபோது.
உக்ரைன்

பட மூலாதாரம், OLEKSANDR KLYMENKO / REUTERS

படக்குறிப்பு, உக்ரைனின் ஆயுத படையை சேர்ந்த நபர் ஒருவர், டோனெட்ஸ்க் பிராந்தியத்தில், இடிந்த வீட்டில் உள்ள பியானோவை வாசிக்கும் காட்சி இது. கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கிழக்கு டோனெட்ஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பகுதிகளில் சண்டை தொடங்கியதிலிருந்து 10,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஃபிரான்ஸ்

பட மூலாதாரம், VALERY HACHE / AFP

படக்குறிப்பு, ஃபிரான்ஸின் கார்னிவல் ஒன்றில் வைப்பதற்காக உருவாக்கப்படும் டிரம்பின் பெரிய உருவம்
சென்னையில் கோயில் யானையின் ஆசிர்வாதத்தை பெறும் மக்கள்.

பட மூலாதாரம், ARUN SANKAR / AFP

படக்குறிப்பு, சென்னையில் கோயில் யானையின் ஆசிர்வாதத்தை பெறும் மக்கள்.
எத்தியோப்பியா

பட மூலாதாரம், EDUARDO SOTERAS / AFP

படக்குறிப்பு, எத்தியோப்பியாவில் அடிஸ் அபாபா நகரிலுள்ள தெரு ஒன்றில் மூன்றாவது நாளாக கார்கள் பயன்பாட்டை தவிர்த்து மக்கள் நடந்து செல்லும் காட்சி இது. இந்த முயற்சி ஆரோக்கியமான வாழ்க்கை பழக்கத்தை ஊக்குவிக்கவும், காற்று மாசை குறைக்கவும், எத்தியோப்பிய அரசு மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிறது.
ஜெர்மனியில், கர்டிங்கன் நகருக்கு அருகில் உள்ள வன உயிர் பூங்காவில் எடுக்கப்பட்ட நரிகளின் புகைப்படங்கள் இவை

பட மூலாதாரம், SWEN PFORTNER / AFP

படக்குறிப்பு, ஜெர்மனியில், கர்டிங்கன் நகருக்கு அருகிலுள்ள உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்ட நரிகளின் புகைப்படங்கள் இவை