கடந்த வார உலக நிகழ்வுகள் புகைப்படங்களில்

டிசம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடந்த உலக நிகழ்வுகள், புகைப்படத் தொகுப்பாக...

பிரான்ஸ்

பட மூலாதாரம், PATRICK HERTZOG / AFP

படக்குறிப்பு, பிரான்ஸில் உள்ள ஸ்டிராஸ்பர்க் கிறித்துமஸ் சந்தையில் பாதுகாப்பு பணிக்காக நிற்கும் சிப்பாய். செரிஃப் செக்கட் என்ற துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரி போலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தெரீசா மே

பட மூலாதாரம், STEFAN ROUSSEAU / PA

படக்குறிப்பு, பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கிறார் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கமிட்டி தலைவர் சர் கிரஹாம் ப்ரேடி.
போப்

பட மூலாதாரம், TIZIANA FABI / AFP

படக்குறிப்பு, வத்திக்கானில் வாரம் தோறும் நடைபெறும் கூட்டத்துக்கு வருகை தரும் போப்பை படம் பிடிக்கிறார்கள் இத்தாலிய சிப்பாய்கள்.
ஜெர்மனி

பட மூலாதாரம், KLAUS-DIETMAR GABBERT / GETTY IMAGES

படக்குறிப்பு, மத்திய ஜெர்மனியில் பனி உறைந்த நிலையில் காணப்படும் உணவகம் ஒன்றின் மொட்டை மாடி.
குடியேறிகள்

பட மூலாதாரம், STEFANO MONTESI / GETTY IMAGES

படக்குறிப்பு, இத்தாலியின் ரோமில், ஒருகாலத்தில் பெனிசிலின் தொழிற்சாலையாகவும், தற்போது குடியேறிகளின் புகலிடமாக இருக்கும் கட்டடத்தின் வெளியே கிறித்துமஸ் தாத்தா வேடமணிந்து ஒருவர் நிற்கும் காட்சி. அங்குள்ள குடியேறிகள் போலிஸாரால் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
பிரான்ஸ்

பட மூலாதாரம், YVES HERMAN / REUTERS

படக்குறிப்பு, பெல்ஜியத்தில் உள்ள பிரஸல்ஸில், பிரான்ஸில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக பெண் ஒருவர் மீது கண்ணீர் புகையை போலிஸார் வீசுகின்றனர். இதை படம் பிடித்த ராய்டர்ஸ் புகைப்பட நிருபரான வேஸ் ஹெர்மன், தன்னுடன் வந்த இளைஞரை போலிஸார் தடுத்ததையடுத்து அந்த பெண் அவர் தவறேதும் செய்யவில்லை என்ற கூற முற்பட்டபோது போலிஸார் அவர் மீது கண்ணீர் புகையை வீசியதாக கூறுகிறார். மேலும் அவர் போராட்டக்காரர்களை போல மஞ்சள் ஜாக்கெட்டும் கூட அணியவில்லை என்று தெரிவிக்கிறார் அவர்.
மக்ரோங்

பட மூலாதாரம், LUDOVIC MARIN / AFP

படக்குறிப்பு, பிரான்ஸில் நான்கு வாரங்களாக எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்களில் பெரும் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் முதன்முறையாக போராட்டத்தை பற்றிய தனது உரையை ஆற்றினார்.
ஜப்பான்

பட மூலாதாரம், KAZUHIRO NOGI / GETTY IMAGES

படக்குறிப்பு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாய் வருடம் செல்வதையும், காட்டு மான் ஆண்டு வருவதையும் குறிக்கும் விதத்தில் நாய் போன்றும் காட்டுப்பன்றி போன்றும் ஆடையணிந்து ஜன்னலை சுத்தம் செய்யும் இருவர்.
கிழக்கு ஜெர்மனியில் சட்டவிரோத பட்டாசுகள் கைப்பற்றப்பட்டு அவை பாதுகாப்பாக வெடிக்கப்பட்டன.

பட மூலாதாரம், PATRICK PLEUL / AFP

படக்குறிப்பு, கிழக்கு ஜெர்மனியில் சட்டவிரோத பட்டாசுகள் கைப்பற்றப்பட்டு அவை பாதுகாப்பாக வெடிக்கப்பட்டன.
இங்கிலாந்து

பட மூலாதாரம், MATT CARDY / GETTY IMAGES

படக்குறிப்பு, இங்கிலாந்தில் உள்ள டிரினிடி க்ளோஸ் என்ற இடத்தில் கிறித்துமஸை ஒட்டி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள வீடு. கடந்த 11 வருடங்களாக டிரினிடி க்ளோஸில் உள்ள குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளை ஒரு லட்சம் வண்ண விளக்குகளால் அலங்கரித்து, தொண்டு காரியங்களுக்கு பணம் சேகரித்து வருகின்றனர்.