அமோக வெற்றிபெற்ற புதின்; சுவாரஸ்ய நிகழ்வுகள் (புகைப்படத் தொகுப்பு)

நான்காவது முறையாக ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதினை தேர்தெடுப்பதற்கு முன்னர் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை விளக்கும் புகைப்படத் தொகுப்பு.

கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்து கொண்டதன் நான்காம் ஆண்டை குறிக்கும் வகையில் மாஸ்கோவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெற்றியுரை ஆற்றினார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்து கொண்டதன் நான்காம் ஆண்டை குறிக்கும் வகையில் பேரணி ஒன்றில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புதின் வெற்றியுரை ஆற்றினார்.
தலைநகரான மானேஸ்னயா சதுக்கத்தில் புதினின் பேச்சை கேட்பதற்கு கூடிய பெருந்திரளான மக்கள்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, கிரிமியா தலைநகரான மானேஸ்னயா சதுக்கத்தில் புதினின் பேச்சை கேட்பதற்கு கூடிய பெருந்திரளான மக்கள்.
ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தேர்தலில் மாஸ்கோவிலுள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் ஒரு நபர்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, புதின் மீண்டும் தேர்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தேர்தலில் மாஸ்கோவிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் ஒரு நபர்.
100 மில்லியனுக்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர். படத்தில் காணும் வாக்காளர்கள் “போலார் கரடி” என்னும் நீச்சல் குழுவை சேர்ந்தவர்களாவர்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, 100 மில்லியனுக்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர். படத்தில் காணும் வாக்காளர்கள் “போலார் கரடி” என்னும் நீச்சல் குழுவை சேர்ந்தவர்களாவர்.
புதினின் பிரச்சாரம் அளித்த நம்பிக்கை அளவுக்கு பெரியளவிலான வெற்றியை தேர்தல் முடிவுகள் காட்டவில்லை. வாக்குப்பதிவின்போது விதிகள் மீறப்பட்டதாக தகவல்கள் தெரிவிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, வாக்குப்பதிவின்போது விதிகள் மீறப்பட்டதாக தகவல்கள் தெரிவிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
தேர்தலில் வாக்களிப்பதற்கு மக்களை ஈர்க்கும் வகையில் உணவுகள், திறன்பேசிகள் மற்றும் சைக்கிள்கள் போன்றவற்றை பரிசாக அளிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.8

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தேர்தலில் வாக்களிப்பதற்கு மக்களை ஈர்க்கும் வகையில் திறன்பேசிகள் மற்றும் சைக்கிள்கள் போன்றவற்றை பரிசாக அளிக்கப்பட்டன.
வாக்குப்பதிவு மையத்திற்கு வரவியலான நிலையிலுள்ள ஸ்மோலென்ஸ்க் போன்ற இடங்களை சேர்ந்தவர்களின் இல்லத்திற்கே வாக்குப்பெட்டி கொண்டுசெல்லப்பட்டது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வாக்குப்பதிவு மையத்திற்கு வரவியலான நிலையிலுள்ள ஸ்மோலென்ஸ்க் போன்ற இடங்களை சேர்ந்தவர்களின் இல்லத்திற்கே வாக்குப்பெட்டி கொண்டு செல்லப்பட்டது.
இந்த தேர்தலில் புதினை எதிர்த்து ஏழு பேர் போட்டியிட்டனர். அவர்களில் முன்னாள் ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான கெசியா சோபோக் மட்டுமே பெண் வேட்பாளராவார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இந்த தேர்தலில் புதினை எதிர்த்து ஏழு பேர் போட்டியிட்டனர். அவர்களில் முன்னாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான கெசியா சோபோக் மட்டுமே பெண் வேட்பாளராவார்.
புதினின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரும், அரசியல் ரீதியான முறைகேட்டில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு, தேர்தலில் போட்டியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டவருமான அலெக்ஸி நவால்னி ஒரு நேரலைக்காக தயாராகிறார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, முக்கிய எதிர்க்கட்சி தலைவரும், அரசியல் ரீதியான முறைகேட்டில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு, தேர்தலில் போட்டியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டவருமான அலெக்ஸி நவால்னி ஒரு நேரலைக்காக தயாராகிறார்.
தேர்தலில் வாக்களிப்பதற்காக மாஸ்கோவில் அமைக்கப்பட்ட ஒரு வாக்குச்சாவடிக்குள் செல்கிறார் புதின்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, தேர்தலில் வாக்களிப்பதற்காக மாஸ்கோவில் அமைக்கப்பட்ட ஒரு வாக்குச்சாவடிக்குள் செல்கிறார் புதின்.