நீலக்கண் தவளை முதல் கணவாய் மீன் வரை: அழகில் சிரிக்கும் இயற்கை

2017-ம் ஆண்டின் தலைசிறந்த இயற்கைப் புகைப்படக் கலைஞரைத் தேர்ந்தெடுப்பதற்கான நேஷனல் ஜியாகரஃபிக் புகைப்படப் போட்டி நவம்பர் 17ம் தேதி நிறைவடைகிறது. அதற்குள் வந்த புகைப்படங்களின் அழகில் கண்கள் விரிவடைகின்றன.

கூர்க் மஞ்சள் புஷ் தவளை

பட மூலாதாரம், Angad Achappa

படக்குறிப்பு, இந்தியாவில் கர்நாடகா மாநிலம் அகும்பே மழைக்காடுகளில் கூர்க் மஞ்சள் புஷ் தவளையை (Coorg yellow bush frog) புகைப்படம் எடுத்தவர் அங்கத் அச்சப்பா. கண்களைச் சுற்றி இதற்கு நீல நிற வளையம் இருப்பதால் இந்தத் தவளை முதலில் ‘நீல வண்ண கண்கள் கொண்ட புஷ் தவளை’ என அழைக்கப்பட்டது.
சாரலுக்கு இடையே ஒரு அழகிய மலைப் பாலத்தைத் தாண்டுகிறது ரயில்.

பட மூலாதாரம், TERUO ARAYA

படக்குறிப்பு, ஃபுகுஷிமா மற்றும் நிக்காடாவை இணைக்கும் தடாமி பாதை, மின்வசதி செய்யப்படாத ஒற்றை ரயில் பாதை ஆகும். "அதிலும் குறிப்பாக தடாமி நதியில் இருந்து இந்த ரயில் பாதையை பார்ப்பது அற்புதமான கண்கொள்ளா காட்சியாக இருக்கும்" என்கிறார் இந்த புகைப்படத்தை எடுத்த டெர்யூ அராயா. "இந்தப் பாதையில் செல்லும் ரயில் வசந்த காலத்தில் செர்ரி பூக்களையும், கோடைகாலத்தில் பசுமையையும், இலையுதிர் காலங்களில் வண்ணமயமான இலைகளையும், குளிர்காலத்தில் பனியையும், பல பாலங்களையும் கடந்து செல்கிறது."
ஓதக்குளம்

பட மூலாதாரம், Felix Inden

படக்குறிப்பு, "நார்வேயின் வடபகுதியில் உள்ள லோஃபோடென் தீவுகளில் கடல் ஓதத்தால் உருவாகியிருக்கும் குளம் கண்கவர் இயற்கை அற்புதம்" என்கிறார் இந்தப் புகைப்படத்தை எடுத்த ஃபெலிக்ஸ் இண்டென். பௌர்ணமிக்கு நெருக்கமான நாள்களில் ஓதம் உயர்ந்து வெள்ளை மணல் இந்தக் குளத்துக்குள் அடித்துக்கொண்டுவரும். பிறகு கண்முன் இயற்கையின் மாயாஜாலம் நிகழும் என்கிறார் அவர்.
புல்வெளியில் மேயும் குதிரை.

பட மூலாதாரம், Sebastiaen

படக்குறிப்பு, ருமேனியாவில் உள்ள டிரான்ஷில்வேனியாவில் உள்ள ஃபண்டாடுரா போனொருலி மலைப் பகுதியில் இந்த புகைப்படத்தை எடுத்தவர் செபாஸ்டியன். சூரிய உதயத்திற்குப் பிறகு காலை வேளையில் அமைதியான தருணத்தில் இரண்டு குதிரைகள் மேய்ந்துக் கொண்டிருக்கின்றன.
சிங்கம்.

பட மூலாதாரம், Joel Fischer

படக்குறிப்பு, கென்யாவின் மாசாய் மாரா தேசிய சரணாலயத்தின் பெரும்பரப்பில், தன் உடம்பை நீட்டிக்கொள்ளும் பெண்சிங்கத்தை புகைப்படம் எடுத்திருக்கிறார் ஜோயல் ஃபிஷ்ச்சர்.
நீல நாரை

பட மூலாதாரம், Jerry am Ende

படக்குறிப்பு, "டெலாவேரில் பாம்பே ஹூக் தேசிய வன உயிர் சரணாலயத்தின் பொன்னான காலை நேரம்" என்கிறார் புகைப்படத்தை எடுத்த ஜெர்ரி ஆம் எண்டே. "இந்த அற்புதமான நீல நாரை தனது இறக்கைகளை விரிக்கும் நேரம் அங்கே காற்று வீசுவதற்கான அறிகுறிகூட இல்லை என்கிறார் அவர்.
ஒட்டக நிழல் படம்.

பட மூலாதாரம், Todd Kennedy

படக்குறிப்பு, மேற்கு ஆஸ்திரேலியாவின் கேபிள் கடற்கரைப் பகுதியில் அந்திசாயும் வேளையில் ஒட்டகங்களின் அணிவகுப்பை, உச்சிக் கோணத்தில் புகைப்படம் எடுத்தவர் டோட் கென்னடி.
நதியில் நனையும் கரடிகள்

பட மூலாதாரம், anat gutman

படக்குறிப்பு, ரஷ்யாவின் கம்சட்காவில், இந்த புகைப்படத்தை எடுத்தவர் அனாட் குட்மேன் "பிறந்து மூன்று மாதங்களேயான கரடிக்குட்டி மிகவும் அழகாக இருந்தது, நான் அதன் அழகில் மயங்கி கிட்டத்தட்ட கேமராவைப் விட்டுவிட்டு அதை கட்டிப்பிடிக்க ஓடினேன், ஆனால் தாய்க் கரடி என்னை சந்தேகத்துடனே பார்த்துக்கொண்டிருந்தது."
பறவைகள்

பட மூலாதாரம், Jassen Todorov

படக்குறிப்பு, ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையிலான குளிர்காலத்தில் வாத்துகள், ஈக்ரெட்ஸ், மற்றும் ஹெரோன்கள் உட்பட ஆயிரக்கணக்கான புலம்பெயரும் பறவைகள், கலிபோர்னியாவின் வட பகுதியை குளிர்கால வாசஸ்தலமாக மாற்றிக் கொள்கின்றன. மிகுந்த வேகத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து இந்த புகைப்படத்தை எடுத்தவர் ஜேசன் டோடொரோவ்.
கூடலில் கணவாய் மீன்கள்

பட மூலாதாரம், Cameron McFarlane

படக்குறிப்பு, "தெற்கு ஆஸ்திரேலியாவின் வொயாலா குளிர் நீரில் வருடாந்திர ஆஸ்திரேலிய மாபெரும் கணவாய் மீன் ஒன்று கூடும் காலத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த காலத்தில் லட்சக்கணக்கான கணவாய் மீன்கள் தங்கள் துணையை தேடி வருவது கண்கொள்ளக் காட்சியாகும். இந்த வகை மீன்கள் பெருமளவில் ஒன்று கூடும் இடம் இதுமட்டுமே " என்கிறார் புகைப்படக்கலைஞர் கேமரூன் மெக்ஃபார்லேன்.
பாசிக்கடியில் முதலை

பட மூலாதாரம், Cole Frechou

படக்குறிப்பு, லூயிசியானாவில், நியூ ஆர்லியன்ஸில் நீரில் படர்ந்திருக்கும் வாத்துப் பாசிக்கு அடியில் காத்துக்கொண்டிருக்கும் முதலையின் இந்த புகைப்படத்தை எடுத்தவர் கோல் ஃப்ரெச்சோ.
சிறு எலும்புக்கூடு எறால்

பட மூலாதாரம், Adam Silverman

படக்குறிப்பு, "எனக்கு பிடித்தமான உயிரினத்தின் மிகப் பிடித்தமான புகைப்படம் இது என்கிறார் ஆடம் சில்வேர்மன். +25 உருப்பெருக்கியை பயன்படுத்தி எடுத்தேன் அதனால் இந்த சின்னஞ்சிறு
பறவைகள்

பட மூலாதாரம், Csaba Daroczi

படக்குறிப்பு, இந்த புகைப்பட்த்தை எடுத்த தருணத்தை நினைவுகூர்கிறார் க்சாபா டரோக்ஜி: "கொஞ்சம் புகைப்படங்களை எடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த காலை வேளை அது. ஏரி ஒன்றில் பெருமளவிலான வாத்துக்கூட்டத்தை பார்த்தேன். உடனே என்னுடைய டிரோனை (புகைப்படம் எடுக்கப் பயன்படும் ஆளில்லா சிறிய ரக விமானம்) வாத்துக் கூட்டத்திற்கு மேல் பறக்கவிட்டு புகைப்படங்களை எடுத்தேன்."
வளைந்து நெளிந்து செல்லும் சாலை

பட மூலாதாரம், Calin Stan

படக்குறிப்பு, "இந்த சேயியா டிஎன்1ஏ சாலை டிரான்ஸில்வேனியாவுக்கு அழைத்துச் செல்கிறது" என்கிறார் கலின் ஸ்டான். " இது புகழ்பெற்ற டிராகுலாவின் பிறப்பிடமான டிரான்சில்வேனியா. இது ஒரு அற்புதமான சாலையின் வியத்தகு கோணம்" என்கிறார் அவர்.
பச்சை, சாம்பல் வண்ண மலை.

பட மூலாதாரம், Alain Boudreau

படக்குறிப்பு, கனடாவின் மக்கன்சி மலைத்தொடரில் சாம்பல் நிறத்திலும், வித்தியாசமான பச்சை வண்ணத்திலும் இருக்கும் மலைகளை புகைப்படம் எடுத்துள்ளார் அலைன் பெளத்ரியு.