பார்சிலோனாவில் நிகழ்ந்த கொடூர வேன் தாக்குதல் (புகைப்படத் தொகுப்பு)

பார்சிலோனாவின் பிரபல சுற்றுலாப் பகுதியான லாஸ் ரம்ப்லாஸில் பாதசாரிகள் மீது நடந்த வேன் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

An injured person is stretchered away from the scene

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இந்த வேன் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
Armed police arrive on the scene

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, வேன் தாக்குதலை நடத்தியதாக சந்தேகப்படும் நபர் தப்பி சென்றிருக்கலாம் என்று கருதும் போலீசார் சம்பவ இடத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Terrified children helped to safety

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, தாக்குதல் காரணமாக பதற்றமடைந்த குழந்தைகள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அதேசமயம், தாக்குதல் நடத்தியவரை தேடும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறகின்றன.
People leave a cordoned off area

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, நகரின் மையப்பகுதியிலிருந்த பெரும்பாலானவர்களை போலீஸார் வெளியேற்றினர்.
Police help a man in a wheelchair to leave the area around the Ramblas

பட மூலாதாரம், Anna Lindsay

படக்குறிப்பு, ரம்ப்லாஸ் பகுதிக்கு அருகே இருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற உதவி செய்யும் போலீசார்.
Local policeman tells tourists and residents to move away from the Ramblas

பட மூலாதாரம், Anna Lindsay

படக்குறிப்பு, சம்பவ இடத்திலிருந்து வெளியேறும்படி சுற்றுலா பயணிகள் மற்றும் குடியிருப்போருக்கு கூறப்பட்டது.
People wait at a cafe terrace after the attack

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, லாஸ் ரம்ப்லாஸ் பகுதியிலுள்ள கஃபே மற்றும் பார்களில் பலர் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்தனர்.
A deserted Placa Catalunya after the attack

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, பிளாக்கா காட்டலூனியா பகுதிக்கு அருகே தெருவோர வியாபாரி ஒருவர் விற்றுவந்த பலூன்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன்
பத்திரமாக அப்புறப்படுத்தப்படும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பத்திரமாக அப்புறப்படுத்தப்படும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன்
கேம்ப்ரில்ஸ் நகரில் இரண்டாவது வேன் தாக்குதல் முயற்சியை முறியடித்தபின் அந்த வாகனத்தைப் பரிசோதிக்கும் போலீசார்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, கேம்ப்ரில்ஸ் நகரில் இரண்டாவது வேன் தாக்குதல் முயற்சியை முறியடித்தபின் அந்த வாகனத்தைப் பரிசோதிக்கும் போலீசார்.