வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தியா, நேபாளம், வங்கதேசம்

அதிக பருவ மழை காரணமாக இந்தியா, வங்கதேசம், நேபாளம் நாடுகளில் உள்ள பகுதிகள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா, நேபாளம், வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பருவ மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 250க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இப்புகைப்படத்தில், நேபாளத்தின் சப்தாரி மாவட்டத்தில் ஒரு நபர் வெள்ளத்தில் நடந்து செல்கிறார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா, நேபாளம், வங்கதேசம்- புகைப்படத் தொகுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில், ஒரு யானை வெள்ள நீரில் நடந்து செல்கிறது.இந்தியாவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கிட்டதட்ட 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா, நேபாளம், வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேபாளத்தில் ஜனாக்ப்பூருக்கு அருகில் உள்ள பகுதியில் வெள்ளம் நிறைந்திருப்பதை விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட இப்புகைப்படம் காட்டுகிறது. பிரதான நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டுள்ளதால்,மீட்பு பணியாளர்களால் பல இடங்களுக்கு செல்ல முடியவில்லை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா, நேபாளம், வங்கதேசம்- புகைப்படத் தொகுப்பு

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, வட வங்கதேசத்தில் ஒரு வீட்டின் அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை மக்கள் பார்க்கின்றனர். பல நாட்கள் பெய்த கனமழையால், நாட்டில் உள்ள முக்கிய நதிகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்ந்து வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா, நேபாளம், வங்கதேசம்- புகைப்படத் தொகுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திரிபுராவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சாலையில், ஒருவர் சிரமப்பட்டு நடந்து வருகிறார்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா, நேபாளம், வங்கதேசம்- புகைப்படத் தொகுப்பு

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, நேபாளத்தில், இரு நபர்கள் ஒருவருக்கொருவர் உதவியுடன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பகுதியை கடக்கின்றனர்