மலேசிய இளவரசி - டச்சுக்காரரை மணந்த ஆடம்பர திருமண விழா

ஜோஹர் சுல்தானின் மகளுக்கும், முன்னாள் மாடலும் கால்பந்து நிர்வாகியுமான டச்சு நாட்டு மணமகனுக்கும் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது.

மலேசிய இளவரசி துன்கு அமினா டச்சுக்காரரை ஆடம்பரமான விழாவில் திருமணம் செய்துக்கொண்டார்

பட மூலாதாரம், EPA/Johor Royal Press Office

படக்குறிப்பு, 31 வயதான துன்கு துன் மைமுனா இஸ்காந்தரியாவுக்கும், இஸ்லாமியராக மாறிய டச்சுக்காரரான 28 வயதான டென்னிஸ் முஹமத் அப்துல்லாவுக்கும் திங்களன்று திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிகளில் சில பொதுவானதாகவும், சில குடும்ப நிகழ்ச்சிகளாகவும் நடத்தப்பட்டன.
மலேசிய இளவரசி துன்கு அமினா டச்சுக்காரரை ஆடம்பரமான விழாவில் திருமணம் செய்துக்கொண்டார்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, பிரதான திருமண நிகழ்வில் சுமார் 1,200 பொதுமக்கள் கலந்து கொண்டனர். இயல்பாக அமர்ந்த நிலையில் திருமணம் நடைபெற்றதாக AFP செய்தி நிறுவனம் கூறுகிறது. ஜொகூர் பாருவில் நகர சதுக்கத்தில் தாதரன் பண்டாராயாவில் பிரம்மாண்ட திரையில் ஒளிபரப்பப்பட்ட திருமண நிகழ்ச்சியை பெருமளவிலான மக்கள் கண்டு ரசித்தனர்.
மலேசிய இளவரசி துன்கு அமினா டச்சுக்காரரை ஆடம்பரமான விழாவில் திருமணம் செய்துக்கொண்டார்

பட மூலாதாரம், AFP/Johor Royal Press Office

படக்குறிப்பு, ஜோஹரின் சுல்தான் இப்ராஹிம் இஸ்மாயிலின் ஆறு குழந்தைகளில் துன்கு துன் மைமுனா மட்டுமே பெண். திங்களன்று மாலையில் நடைபெற்ற திருமணத்தில், மணமக்களை ஆசீர்வதிக்கிறார் சுல்தான். புனித தீர்த்தமும், மஞ்சள் அட்சதை அரிசியையும் தூவி குடும்பத்தினரும், விருந்தினர்களும் மணமக்களை வாழ்த்துகின்றனர்.
மலேசியா இளவரசி துன்கு அமினா டச்சுக்காரரை ஆடம்பரமான விழாவில் திருமணம் செய்துக்கொண்டார்

பட மூலாதாரம், AFP/JOHOR ROYAL PRESS OFFICE

படக்குறிப்பு, ஆம்ஸ்டர்டாமுக்கு அருகில் உள்ள ஒரு நகரத்தில் பிறந்த டென்னிஸ் விர்பாஸ் சிங்கப்பூரில் மாடலிங் செய்துவந்தார். அவரது தந்தை மலர் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார், தாயார் துணிக்கடையில் பணிபுரிகிறார். 2015 ஆம் ஆண்டில் இஸ்லாம் மதத்தை தழுவிய டென்னிஸ் விர்பாஸ், ஜோகரில் ஒரு வீட்டுமனை நிறுவனத்தில் பணிபுரியும் விர்பாஸ், சிங்கப்பூரில் உள்ள டிம்பின்ஸ் ரோவர்ஸ் கால்பந்துக் கழகத்தின் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்தவர்.
மலேசியா இளவரசி துன்கு அமினா

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, அரச குடும்பத்தின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஆடம்பரமாக, அலங்காரமாக செய்யப்பட்டிருந்தன. அரண்மனை அரங்குகள் அலங்கரிக்கப்பட்டன, தெருக்களில் நாட்டின் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன. திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்ற வளாகத்தை சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
மலேசியாவின் தெற்கு ஜோஹர் மாநிலத்தின் அரச குடும்பம் அதிகாரம்மிக்க செல்வந்த குடும்பம். நாட்டில் தனியார் ராணுவத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஒரே மாநிலம் ஜோஹர் மட்டுமே.

பட மூலாதாரம், AFP/Johor Royal Press Office

படக்குறிப்பு, மலேசியாவின் தெற்கு ஜோஹர் மாநிலத்தின் அரச குடும்பம் அதிகாரம்மிக்க செல்வந்த குடும்பம். நாட்டில் தனியார் ராணுவத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஒரே மாநிலம் ஜோஹர் மட்டுமே.
மலேசியா இளவரசி துன்கு அமினா டச்சுக்காரரை ஆடம்பரமான விழாவில் திருமணம் செய்துக்கொண்டார்

பட மூலாதாரம், AFP/JOHOR ROYAL PRESS OFFICE

படக்குறிப்பு, முன்னதாக, மணமக்களுக்கு தனிப்பட்ட முறையில் சடங்குகள் நடத்தப்பட்டன. மலேசியாவின் காபி விடுதியில் முதல் சந்திப்பில் பார்த்ததுமே பற்றிக் கொண்ட காதல், மூன்று வருடங்களுக்கு பின் திருமணமாக கனிந்தது.
மலேசியா இளவரசி துன்கு அமினா

பட மூலாதாரம், AFP/JOHOR ROYAL PRESS OFFICE

படக்குறிப்பு, இளவரசி, அழகான வெண்ணிற ஆடை அணிந்து, ஜொலிக்கும் நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். பாரம்பரிய உள்ளூர் வழக்கப்படி, மணப்பெண்ணுக்கு 22.50 ரிங்கிட் (£ 4) வரதட்சணை பணத்தை மணமகன் வழங்கினார்.
மலேசிய இளவரசி துன்கு அமினா டச்சுக்காரரை ஆடம்பரமான விழாவில் திருமணம் செய்துகொண்டார்

பட மூலாதாரம், AFP/Johor Royal Press Office

படக்குறிப்பு, "எங்கள் சொந்த வீட்டில் மண வாழ்க்கையை தொடங்குவோம், முதன்முறையாக என் பெற்றோரிடமிருந்தும் குடும்பத்திலிருந்தும் பிரிந்து தனியாக வசிக்கப் போகிறேன்" என்று இளவரசி கூறியதாக ஜோஹர் ராயல் பிரஸ் அலுவலகம் வெளியிட்டஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.