“கட்டித்தழுவுதல்” (புகைப்படத் தொகுப்பு)

“கட்டித்தழுவுதல்” என்ற தலைப்பில் இந்த வாரம் வாசகர்கள் அனுப்பிய தலைசிறந்த புகைப்படங்களை தொகுப்பாக உங்களுங்கு வழங்குகின்றோம்.

குன்றின் உச்சியில் இருவர்

பட மூலாதாரம், Marcin

படக்குறிப்பு, மர்சின்: “புயல் வீசுகிறபோது மகிழ்ச்சியடைவது கடினம் என்று சிலர் கூறுகிறார்கள். அதனை “ஆரத்தழுவி கொள்ளுங்கள்” என்று நான் கூறுகிறேன். மழை பெய்துகொண்டிருக்கும்போது கூட நீங்கள் மகிழ்சியடையலாம். அதனை வித்தியாசமான கோணத்தில் நீங்கள் அதனை பார்க்க வேண்டும். அவ்வளவுதான்”
மூன்று ஆமைகள்

பட மூலாதாரம், Mark Tilley

படக்குறிப்பு, மார்க் தில்லே: இவை மூன்று பச்சை நிற ஆமைகள். வலதுபுறத்தில் இருப்பது பெண். நடுவில் இருப்பது ஆண். சிவ பூஜையில் கரடி நுழைவதைபோல, இந்த இரண்டையும் தொந்தரவு செய்யவே, மூன்றாவது ஆண் ஆமையொன்று இவற்றோடு சேருகிறது”.
ஜென்னி டவ்னிங்: “பாதாம் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்து செய்யப்பட்ட திருமண கேக் உருவங்களின் தொடுதல் தருணம்”

பட மூலாதாரம், Jenny Downing

படக்குறிப்பு, ஜென்னி டவ்னிங்: “பாதாம் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்து செய்யப்பட்ட திருமண கேக் உருவங்களின் தொடுதல் தருணம்”
கூண்டில் இரண்டு பறவைகள்

பட மூலாதாரம், Indrajeet

படக்குறிப்பு, இந்திரஜீத்: இந்த கூண்டுக்குள் இந்த பறவைகளை இவ்வாறு பார்ப்பதில் பொறாமையாக உள்ளது. அவை ஒன்றுக்கொன்று காதலோடு வாழ போகின்றன”.
கைக்கட்டி கொண்டிருக்கும் பெரியவர்

பட மூலாதாரம், Elisenda Russell

படக்குறிப்பு, எலிசென்டா ருசெல்: “கடந்த 7 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வாழ்ந்து வருகிறேன். என்னுடைய குடும்பத்தினர் ஐக்கிய ராஜ்ஜியத்தில் அல்லது ஸ்பெயினில் உள்ளனர். இவ்வாறு தெலைதூரங்களில் இருப்பது சில வேளைகளில் வெறுமையை உணர செய்கிறது. என்னுடைய தாத்தாவை விட்டு பிரியும்போது, அவரை கட்டித்தழுவுவது என்னால் சகிக்க முடியாதது. அந்த உணர்வுகள் அப்படியே உள்ளன”
மணல் தரையில் இருக்கும் பெண்

பட மூலாதாரம், Jessica Boulton

படக்குறிப்பு, ஜெசிகா பௌல்டன்: “இந்த புகைப்படத் தொடர் எனக்கும், என்றுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவருக்கும் இடையிலானதொரு தனிப்பட்ட பணித்திட்டம். நாங்கள் இருவரும் எல்லாவித தன்நம்பிக்கையையிலும் மிகவும் பலவீனமானவர்கள். எனவே, என்னுடைய புகைப்படத் திறனை பயன்படுத்தி அவளுடைய இயற்கையான அழகை அவள் உணாந்துகொள்ள செய்வதே என்னுடைய நோக்கம். எங்களுக்கு தேவையான சிறிதளவு தன்நம்பிக்கைக்கு நெருக்கி வர செய்யும் ஒரு படியாக இது இருக்குமென நம்புகிறேன்.
கைப்பிடித்து கொண்டிருக்கும் இரண்டு பூனைகள்

பட மூலாதாரம், Sarah Burrard-Lucas

படக்குறிப்பு, சாரா புர்ரார்டு-லூகாஸ்: என்னுடைய செர்பிய பூனைகளான சீசர் மற்றும் நீரோவின் புகைப்படம் இது. அவற்றுக்கு சண்டையிட உடன்பிறப்புகள் இல்லாதபோது, அடிக்கடி இவ்வாறு கட்டிப்பிடித்து கொண்டு தூங்குவதை பார்க்கலாம்”
திருமணமானோர் கட்டிப்பிடித்தல்

பட மூலாதாரம், Sirsendu Gayen

படக்குறிப்பு, சிர்சென்து கயென் என்பவரால் மியான்மரின் யங்கூனில் எடுக்கப்பட்ட திருமண ஜோடிகளின் புகைப்படம்
வயலில் இரண்டு குதிரைகள்

பட மூலாதாரம், Linda Taylor

படக்குறிப்பு, இறுதியாக, லின்டா டெய்லரிடம் இருந்து வந்துள்ள கிங்டனுக்கு அருகிலுள்ள பௌயிஸில், ஹெர்கெஸ்ட் ரிட்ஜ் குன்றில் இருக்கும் இரண்டு குதிரைகளின் புகைப்படம்.