ஐரோப்பிய ஒன்றிய அகதித்தஞ்ச உரிமை குறித்து பரபரப்பு தீர்ப்பு
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சம் கோரும் அகதிகள், எந்த நாட்டுக்கு முதலில் வருகிறார்களோ அந்தநாட்டிலேயே அகதித்தஞ்சம் கோரமுடியும் ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2015-1016 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடியேறிகள் நெருக்கடி முற்றியபோது அந்நாடுகளுக்கு வந்தவர்கள் பலர் ஜெர்மனி உள்ளிட்ட தம் உறவினர்கள் வாழும் பல்வேறு நாடுகளை சென்றடைய விரும்பினர்.
ஆனால் அவர்கள் அந்தந்த நாட்டு அரசுகளால் வெளியேற்றப்பட்டனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் வரும் அகதிகள் எந்த நாட்டில் வேண்டுமானாலும் தஞ்சம் கோரலாம் என்பது அகதி உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாட்டு அரசுகளோ அகதிகள் எந்த நாட்டில் முதலில் கால்பதிக்கிறார்களோ அந்த நாட்டிலேயே பதிந்து அகதி தஞ்சம் கோர வேண்டும் என்கிற டப்ளின் விதியை காரணம் காட்டி இந்த கோரிக்கையை நிராகரித்துவருகிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அதி உயர் நீதிமன்றம் அரசுகளின் நிலையே சரி என்று தீர்ப்பளித்திருக்கிறது.
இன்றைய தீர்ப்பு காரணமாக அகதித்தஞ்சக் கோரிக்கையாளர்கள் பலர் பலவந்தமாக வெவ்வேறு நாடுகளில் மீள்குடியேற்றப்படலாம் என அகதி உரிமை செயற்பாட்டாளர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்