அமெரிக்கா சென்றடைந்த ஆப்கன் மாணவிகளின் ரோபோடிக்ஸ் கனவு
உலகின் பல நாடுகளைச்சேர்ந்த மேநிலைப்பள்ளி மாணவர்களுக்கான ரோபோடிக்ஸ் போட்டி வாஷிங்க்டனில் இன்று திங்கட்கிழமை துவங்குகிறது.
அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதத்துறைகளில் இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதற்காக இது நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்க தேர்வான ஆப்கன் மாணவிகளின் அமெரிக்கப் பயணத்துக்கான விசா வழங்கப்படவில்லை. அவர்கள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு தடையும் விதிக்கப்பட்டது.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொண்டுவந்த கடுமையான விசா கட்டுப்பாடுகளே அதற்கு காரணம் என்று கூறப்பட்டது.
ஆனால் அதே டொனால்ட் ட்ரம்ப் இவர்கள் விவகாரத்தில் நேரடியாக தலையிட்டதைத் தொடர்ந்து இவர்களுக்கு விசா அளிக்கப்பட்டது.
பலவித தடைகளைக் கடந்து இவர்கள் அமெரிக்கா வந்திருப்பது ஆப்கானிஸ்தானின் பெண்களுக்கு, குறிப்பாக மாணவிகளுக்கு நம்பிக்கையளிக்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்