“கனடா 150”: கொண்டாட்டங்கள் (புகைப்படத் தொகுப்பு)

கனடா முழுவதுமுள்ள மக்கள் நாட்டின் 150வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அந்த நிகழ்வின் முக்கியப் பதிவுகள்

கனடா மூக்கு கண்ணாடி அணிந்த பெண்ணொருவர்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, ஒவ்வோர் ஆண்டும் கனடா மக்கள் தங்களடைய தேசிய நாளை ஜூலை முதல் நாள் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு 150வது ஆண்டாக இருப்பதால் சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மிக பெரிய விருந்துகள் நாடெங்கும் நடைபெற்றுள்ளன.
கனடா 150

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, முன்னாள் பிரிட்டன் மூன்று காலனிகள் ஒன்றாக இணைந்தபோது கனடா நாடாக உருவானது.
கனடா 150

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, 1982-ஆம் ஆண்டுதான், பிரிட்டன் முழுமையான தன்னாட்சியை கனடாவுக்கு வழங்கியது. அப்போது, அதன் அரசியல் சட்டத்தைத் திருத்திக் கொள்ளும் அதிகாரத்தையும் கனடாவுக்கு வழங்கியது.
கனடா 150

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இருப்பினும், பிரிட்டன் அரசிதான் கனடாவின் அரசியாகவும் இருக்கிறார். அதனால்தான் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஒட்டவாவில் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மக்கள் கூட்டத்திற்கு உரையாற்றினார்.
கனடா 150

பட மூலாதாரம், eff Vinnick/Getty Images

படக்குறிப்பு, 512 கப் கேக்குகளை பயன்படுத்தி செய்யப்பட்ட கனடா தேசிய கொடி
35.2 மில்லியன் மக்களுக்கு இன்று கனடா தாயகமாக உள்ளது. 1867 ஆம் ஆண்டு இருந்ததைவிட இது 10 மடங்கு அதிகம்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, 35.2 மில்லியன் மக்களுக்கு இன்று கனடா தாயகமாக உள்ளது. 1867 ஆம் ஆண்டு இருந்ததைவிட இது 10 மடங்கு அதிகம்.
உலகிலுள்ள நன்னீரில் ஐந்தில் ஒரு பகுதியும் கனடாவில்தான் உள்ளது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, உலகிலுள்ள நன்னீரில் ஐந்தில் ஒரு பகுதியும் கனடாவில்தான் உள்ளது.
கனடா 150

பட மூலாதாரம், Jeff Vinnick/Getty Images

படக்குறிப்பு, “கனடா 150” கொண்டாட்டத்தை முன்னிட்டு வான்கூவரில் நடைபெற்ற யோகா அமர்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கனடா 150

பட மூலாதாரம், CHRIS ROUSSAKIS/AFP/Getty Images

படக்குறிப்பு, கனடாவின் 150வது பிறந்தநாளில் ஒட்டவாவில் உரையாற்றிய பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ (ஜூலை 1)