ஈத் பெருநாள் கொண்டாட்டங்கள்: புகைப்படத் தொகுப்பு

ரமலான் நோன்பின் முடிவை குறிக்கும் விடுமுறையை இஸ்லாமிய சமூகம் கொண்டாடத் தொடங்கிவிட்டது.

A group of girls is greeted by a woman during the Muslim holiday of Eid al-Fitr, in the village of Dalgamon, Tanta, some 120km north of Cairo, Egypt, 25 June

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, பிறை தெரிந்தது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, எகிப்து மற்றும் பிற அரபு நாடுகள் தங்களது கொண்டாட்டங்களை நேற்று முதலே (ஞாயிறு) தொடங்கின. டல்காமன் என்ற எகிப்து கிராமத்தில் உள்ள வீதி ஒன்றில் எடுக்கப்பட்ட காட்சி.
Iraqi girl celebrates Eid al-Fitr in Mosul, 25 June

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரினால் சின்னாபின்னமான மொசூல் நகரில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஈத் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
Muslim worshippers leave the Blue Mosque after the Eid al-Fitr prayers in Istanbul, 25 June

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இஸ்தான்புல்லிலுள்ள இந்த துருக்கிய இஸ்லாமியர்கள் தங்களுடைய ஈத் பிரார்த்தனைகள் வரலாற்று சிறப்புமிக்க நீல மசூதியில் நடத்தியுள்ளனர்.
Syrian President Bashar al-Assad (2nd L) attends prayers in Hama, 25 June

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஹமா நகரில் நடைபெற்ற தொழுகையில் சிரியா அதிபர் பஷார் அல்-அசாத் கலந்து கொண்டார்.
Muslims pray on the street in Moscow, 25 June

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, ரஷ்ய தலைநகரில் உள்ள இஸ்லாமியர்கள், மத்திய மசூதிக்கு அருகே உள்ள வீதியில் தொழுகை நடத்தினர்.
Kyrgyz Muslims pray in central Bishkek, with a monument of Soviet State founder Vladimir Lenin seen in the background, 25 June

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, முன்னாள் சோவியத் மத்திய ஆசிய குடியரசான கிர்கிஸ்தானிலும், இஸ்லாமியார்கள் வீதிகளில் தொழுகையில் ஈடுபட்டனர்.
Palestinian Muslims attend the Eid al-Fitr prayer in an open area of Gaza City, 25 June

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இந்த பாலத்தீன பெண்கள் மற்றும் சிறுமிகள் காஸா நகரில் தொழுகை செய்வதற்காக வந்துள்ளனர். இந்த வாரம், காஸாவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு எகிப்து எரிபொருள் விநியோகத்தை தொடங்கியுள்ளது.
Muslim women walk after praying during Eid al-Fitr at a mosque inside the city hall compound in Marawi City, Philippines, 25 June

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஈத் பெருநாளை முன்னிட்டு பெரும்பான்மை முஸ்லிம் நகரான மாராவியில் பிலிப்பின்ஸ் ராணுவம் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. அங்குதான் இஸ்லாமியவாத தீவிரவாதிகளை எதிர்த்து ராணுவம் சண்டையிட்டு வருகிறது.
Members of Southwark's Muslim community pose for a photograph during Eid celebrations in Dulwich Park, London, 25 June

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டுல்விச் பூங்காவில் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் லண்டன் வாழ் முஸ்லீம் பெண்கள்.