லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் - புகைப்படத் தொகுப்பு

மத்திய லண்டனில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு.

லண்டன் பிரிட்ஜ் பகுதியில் வேன் ஒன்று பொதுமக்கள் பலரை மோதியதாக வந்த தகவலையடுத்து போலீஸார் எதிர்வினையாற்றினர்.

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, லண்டன் பிரிட்ஜ் பகுதியில் வேன் ஒன்று பொதுமக்கள் பலரை மோதியதாக வந்த தகவலையடுத்து போலீஸார் எதிர்வினையாற்றினர்.
தாக்குதல் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு அருகே சுற்றியுள்ள பகுதிகள் உடனடியாக மூடப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாக்குதல் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு அருகே சுற்றியுள்ள பகுதிகள் உடனடியாக மூடப்பட்டன.
சம்பவ இடத்திற்கு ஆயுதமேந்திய போலீஸார் சில நிமிடங்களில் வந்தனர்.

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, சம்பவ இடத்திற்கு ஆயுதமேந்திய போலீஸார் சில நிமிடங்களில் வந்தனர்.
லண்டன் பிரிட்ஜின் நடைபாதையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மோதி நின்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, லண்டன் பிரிட்ஜின் நடைபாதையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மோதி நின்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த புகைப்படத்தில் உள்ள வெள்ளை வேன் லண்டன் பிரிட்ஜ் தாக்குதல்தாரிகள் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.

பட மூலாதாரம், H. Attai

படக்குறிப்பு, இந்த புகைப்படத்தில் உள்ள வெள்ளை வேன் லண்டன் பிரிட்ஜ் தாக்குதல்தாரிகள் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.
சமூக ஊடக பயன்பாட்டாளர் ஒருவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், நபர் ஒருவர் சிறு கொள்கலன்கள் போல தோன்றும் சிலவற்றை தன்னுடைய உடலோடு கட்டிருந்தார். பின்னர், அவை போலி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Gabriele Sciotto

படக்குறிப்பு, சமூக ஊடக பயன்பாட்டாளர் ஒருவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், நபர் ஒருவர் சிறு கொள்கலன்கள் போல தோன்றும் சிலவற்றை தன்னுடைய உடலோடு கட்டிருந்தார். பின்னர், அவை போலி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மூன்று சந்தேக நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Dominic Lipinski

படக்குறிப்பு, பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மூன்று சந்தேக நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அமைதியாகவும், எச்சரிக்கையாகவும் மற்றும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் போலீஸார் கூறியுள்ளனர்.

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, அமைதியாகவும், எச்சரிக்கையாகவும் மற்றும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் போலீஸார் கூறியுள்ளனர்.
சம்பவ இடத்தில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் காட்சி.

பட மூலாதாரம், AFP/Getty

படக்குறிப்பு, சம்பவ இடத்தில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் காட்சி.
லண்டன் பிரிட்ஜில் அவசர சேவை ஹெலிகாப்டர் தரையிறங்கும் காட்சி.

பட மூலாதாரம், AFP/Getty

படக்குறிப்பு, லண்டன் பிரிட்ஜில் அவசர சேவை ஹெலிகாப்டர் தரையிறங்கும் காட்சி.