காஷ்மீர்: தொடரும் மோதலும் தணியாத பதற்றமும்
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் அண்மைக் காலத்தில் வன்முறைகள் மேலோங்கியுள்ளன.
கடந்த 2010ஆம் ஆண்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட அதற்கு நியாயம் கேட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
அந்தக் கொலைக்கு காவல்துறையே காரணம் என்று மக்கள் கூறிய குற்றச்சாட்டு மறுக்கப்பட்டது. கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறி, காவல்துறை வழக்கை முடித்துவிட்டது.
இது மக்களை மேலும் ஆத்திரமூட்டி போராட்டங்களை வலுப்பெறச் செய்தது.
எனினும் அந்தப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட இருவர் பின்னர் வன்முறையை கைவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
சர்ச்சைக்குரிய காஷ்மீரை இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கோருகின்றன. ஆனால் அது தமது நாட்டின் ஒரு பகுதி என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளாக அங்குள்ள சூழல் குறித்த பார்வை.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்