ரஷ்யாவில் 11 பேரை பலிவாங்கிய ரயில் நிலைய குண்டு வெடிப்பு (புகைப்பட தொகுப்பு)

ரஷ்யாவில் திங்களன்று, செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் குறைந்தது 45 பேர் காயமடைந்துள்ளனர்.

செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலில் 11 பேர் பலியாகியுள்ளனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலில் 11 பேர் பலியாகியுள்ளனர்
சம்பவ இடத்தை நோக்கி அவசர சேவைகள் உடனடியாக சென்றன

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, சம்பவ இடத்தை நோக்கி அவசர சேவைகள் உடனடியாக சென்றன
இந்த சம்பவத்தில் குறைந்தது 45 பேர் காயமடைந்துள்ளனர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இந்த சம்பவத்தில் குறைந்தது 45 பேர் காயமடைந்துள்ளனர்
பாதிக்கப்பட்டவர்கள் புகைச்சூழப்பட்ட ரயில் நிலையத்திலிருந்து சிரமத்துடன் வெளியே வந்தனர்

பட மூலாதாரம், AFP/Getty images

படக்குறிப்பு, பாதிக்கப்பட்டவர்கள் புகைச்சூழப்பட்ட ரயில் நிலையத்திலிருந்து சிரமத்துடன் வெளியே வந்தனர்
இச்சம்பவம் குறித்து மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு, இச்சம்பவம் குறித்து மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ரயில் நிலையத்தின் வாயிலில் ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டது

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ரயில் நிலையத்தின் வாயிலில் ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டது
கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக மாஸ்கோ மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக மாஸ்கோ மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்
சம்பவ இடத்தில் அதிபர் புதின் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சம்பவ இடத்தில் அதிபர் புதின் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்
பொதுமக்கள் மலர்களை வைத்தும் மெழுவர்த்திகளை ஏற்றியும் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு, பொதுமக்கள் மலர்களை வைத்தும் மெழுவர்த்திகளை ஏற்றியும் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்
இச்சம்பவத்தில் பலியாகியானவர்களுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

பட மூலாதாரம், iStock

படக்குறிப்பு, இச்சம்பவத்தில் பலியானவர்களை நினைவு கூறும் வகையில் வைக்கப்பட்ட கல்லின் மீது பொது மக்கள் மலர் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
பாதிக்கப்பட்டவர்களுக்காக தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது

பட மூலாதாரம், AFP/Getty images

படக்குறிப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்காக தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது