பிரிட்டன் நாடாளுமன்ற தாக்குதல்: படங்களில்

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த “பயங்கரவாத தாக்குதலில்” ஆயுதம் தரித்த நாடாளுமன்றக்காவலர், தாக்குதலாளி உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருபதுபேர் காயமடைந்தனர். அதில் சிலர் மோசமான காயமுற்றுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் ஆயுதக்காவலர்கள்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த “பயங்கரவாத தாக்குதலில்” ஆயுதம் தரித்த நாடாளுமன்றக்காவலர், தாக்குதலாளி உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருபதுபேர் காயமடைந்தனர். அதில் சிலர் மோசமான காயமுற்றுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஆபத்துக்கால மீட்புப்படையினர்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, நாடாளுமன்ற வளாகத்தை மதியம் 2.40 மணிக்கு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டு தாக்குதலாளிமீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து ஆபத்துக்கால மீட்புப்படையினர் ஒட்டுமொத்த வளாகத்தையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சிகிச்சையளிக்கும் ஆம்புலன்ஸ் சேவையினர்
படக்குறிப்பு, ஆம்புலன்ஸ் சேவையினர் தேம்ஸ்நதி மீதுள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் தாக்குதலாளியின் கார் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கின்றனர்.
ஆயுதக்காவலர்கள் துப்பாக்கி முனையில் ஒரு நபரை கட்டுப்படுத்தி வைத்திருந்த காட்சி

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஆயுதக்காவலர்கள் துப்பாக்கி முனையில் ஒரு நபரை கட்டுப்படுத்தி வைத்திருந்த காட்சி
அவர் ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆம்புலன்ஸுக்குள் கொண்டு செல்லப்பட்டார்.

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, அவர் ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆம்புலன்ஸுக்குள் கொண்டு செல்லப்பட்டார்.
நாடாளுமன்றத்திலிருந்த பிரிட்டிஷ் பிரதமர் அங்கிருந்து அவசர அவசரமாக அவரது டவுனிங்க் தெரு இல்லத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாடாளுமன்றத்திலிருந்த பிரிட்டிஷ் பிரதமர் அங்கிருந்து அவசர அவசரமாக அவரது டவுனிங்க் தெரு இல்லத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்
நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஆயுதக்காவலர்கள்

பட மூலாதாரம், Alison Baskerville

படக்குறிப்பு, நாடாளுமன்ற செயற்பாடுகள் அவசர அவசரமாக முடிக்கப்பட்டு பார்வையாளர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டதோடு ஒட்டுமொத்த வளாகமும் பூட்டப்பட்டது
வெஸ்ட்மினிஸ்டர்ஸ் பாலத்தில் காயமுற்றவர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெஸ்ட்மினிஸ்டர்ஸ் பாலத்தில் காயமுற்றவர்கள் ஆம்புலன்ஸ் சேவையினரால் முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
காயமுற்றவர்கள் ஆம்புலன்ஸ் சேவையினரால் முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெஸ்ட்மினிஸ்டர்ஸ் பாலத்தில் காயமுற்றவர்கள் ஆம்புலன்ஸ் சேவையினரால் முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எல்லா சாலைகளும் மூடப்பட்டதால் அங்கிருந்த லண்டன்வாசிகளும் சுற்றுலாப்பயணிகளும் திகைத்து நின்றனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எல்லா சாலைகளும் மூடப்பட்டதால் அங்கிருந்த லண்டன்வாசிகளும் சுற்றுலாப்பயணிகளும் திகைத்து நின்றனர்
சம்பவ இடத்தில் சிக்கிக்கொண்டவர்கள் அவசரகதியில் அங்கிருந்து வெளியேறித்தப்பினர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சம்பவ இடத்தில் சிக்கிக்கொண்டவர்கள் அவசரகதியில் அங்கிருந்து வெளியேறித்தப்பினர்
பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை தலைவர் மார்க் ரோவ்லி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “இப்படியொரு தாக்குதலை எதிர்கொள்ள நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும், இப்படியொரு நிகழ்வு நடக்கக்கூடாது என்றே விரும்பினோம்”, என்றார் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை தலைவர் மார்க் ரோவ்லி.
தேம்ஸ் நதியில் ரோந்துப்படகுகள்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, சம்பவம் நடந்த உடன் தேம்ஸ் நதியில் ரோந்துப்படகுகள் பணியில் இறக்கப்பட்டன. தாக்குதலுக்கு அஞ்சி தேம்ஸ் நதியில் குதித்த பெண் மீட்கப்பட்டார்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஆயுதக்காவலர்கள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, நாடாளுமன்ற வளாகம் இருக்கும் இடத்திற்கு அருகே பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.