செருப்பு தைப்பவருக்கு 10 ரூபாய் கூலிக்கு 100 ரூபாய் தந்த ஸ்மிருதி இரானி (காணொளி)
நேற்று சனிக்கிழமை கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இஷா ஃபவுண்டேஷனின் தலைமையகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பேரூர் சாலையில் செல்லும் போது, சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் ஒரு செருப்புத் திருத்தும் தொழிலாளியின் ஸ்டாலில் காரை நி்றுத்தி, ஸ்டாலுக்குச் சென்று தனது பிய்ந்து போன ஒரு செருப்பைச் சரி செய்யுமாறு கோரினார்.
அந்த செருப்புத் தொழிலாளி, கணேஷ் , அவரது செருப்பைத் திருத்தித் தந்தவுடன், அதற்கான ஊதியம் என்ன என்று கேட்டவுடன், அவர் 10 ரூபாய் என்று சொல்ல, தன்னிடம் 10 ரூபாய் இல்லாததால், இருந்த 100 ரூபாய் தாளை எடுத்து அவரிடம் கொடுத்துள்ளார் இரானி.