பிடல் காஸ்ட்ரோவின் புரட்சிகர வாழ்வு - புகைப்படங்களில்

கியூபா புரட்சியின் தளகர்த்தர் பிடல் காஸ்ட்ரோவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாழ்க்கையின் அரிதான புகைப்படங்கள்

ஃ பிடல் காஸ்ட்ரோ

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, ஃபிடல் காஸ்ட்ரோ 1926ம் ஆண்டில் பணக்கார குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே அவர் புரட்சிகர அரசியலில் ஈடுபட்டார்.
ஃபிடல் காஸ்ட்ரோ

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, 1959ல் ஜனவரி 8ம் தேதி, ஃபிடல் காஸ்ட்ரோ தனது ஆதரவாளர்களிடம் பேசும் காட்சி. தோல்வியில் முடிந்த ஆட்சி கவிழ்ப்பை நடத்தியதால், இரண்டு வருடங்களை சிறையில் கழித்த பிறகு, அவர் மெக்ஸிக்கோவில் புகலிடம் தேடிச் சென்றார். அவர் 1956 ல் திரும்பிய அவர், செ குவெராவுடன் இணைந்து அரசுக்கு எதிராக கெரில்லாப் போர் தொடங்கினார். காஸ்ட்ரோ இறுதியாக கியூபாவில் ஆட்சியை அந்த நாட்டின் புத்தாண்டு தினமான, 1959 இல் கைப்பற்றினார்.
காஸ்ட்ரோவின் ஆட்சியை கவிழ்க்க முயன்றவர்களை எதிர்த்து பே ஆஃப் பிக்ஸில் நடத்திய போர்.

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, கியூபாவின் கிரோன் என்ற பகுதியில் உள்ள பே ஆஃப் பிக்ஸ் என்ற இடத்தில், ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு டாங்கியில் இருந்து குதிக்கும் காட்சி. 1961ல் காஸ்ட்ரோ, புலம் பெயர்ந்து வாழ்ந்த 1,500 கியூப நபர்களுக்கு எதிராக தனது படையை முன்னெடுத்துச் செல்கிறார். புலம் பெயர்ந்தவர்கள் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏவின் ஆதரவு பெற்றவர்கள். காஸ்ட்ரோவின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி அவர்களை எதிர்த்து பே ஆஃப் பிக்ஸில் நடத்திய போராட்டத்தில் ஒரு காட்சி.
1962ல் காஸ்ட்ரோவிற்கு ஒரு பெரிய சோதனை வந்தது. அமெரிக்க அதிபர் கென்னெடி கியூபாவில் இருந்து சோவியத் ஒன்றியத்தின் ஏவுகணைகளை நீக்குமாறு எச்சரிக்கை செய்தார்.

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, 1962ல் காஸ்ட்ரோவிற்கு ஒரு பெரிய சோதனை வந்தது. அமெரிக்க அதிபர் கென்னெடி கியூபாவில் இருந்து சோவியத் ஒன்றியத்தின் ஏவுகணைகளை நீக்குமாறு எச்சரிக்கை செய்தார்.
1963ல் மே மாதம் ஃபிடல் காஸ்ட்ரோ சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவின் கைகளைப் பிடித்து உயர்த்தும் காட்சி. இந்தப் படம் அவர் அதிகாரபூர்வமாக மாஸ்கோவிற்கு வருகை தந்தபோது எடுக்கப்பட்டது.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, 1963ல் மே மாதம் ஃபிடல் காஸ்ட்ரோ சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவின் கைகளைப் பிடித்து உயர்த்தும் காட்சி. இந்தப் படம் அவர் அதிகாரபூர்வமாக மாஸ்கோவிற்கு வருகை தந்தபோது எடுக்கப்பட்டது. இறுதியில், சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவ் மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ ஏவுகணைகளை அகற்றினர். அணு ஆயுதப் போரும் தவிர்க்கப்பட்டது.
பேஸ்பால் விளையாட்டு ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு விருப்பமான விளையாட்டு

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, பேஸ்பால் விளையாட்டு ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு விருப்பமான விளையாட்டு என்பது நன்கு அறியப்பட்ட தகவல். இது, 1962ல் சியரா மாஸ்ட்ரா என்ற இடத்தில் உள்ள ஆசிரியர்களின் கல்லூரியில் விளையாடும் காட்சி.
பல தாராளவாத கியூப பிரஜைகள் அவரை ஒரு ஒடுக்குமுறை ஆட்சி நடத்திய சர்வாதிகாரி என்று கருதுகின்றனர்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, பல தாராளவாத கியூப பிரஜைகள் அவரை ஒரு ஒடுக்குமுறை ஆட்சி நடத்திய சர்வாதிகாரி என்று கருதுகின்றனர்.
கியூபா நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் பெரும்பாலும், ஆபத்தான தற்காலிக படகுகள் மீது ஏறி, தங்கள் தாயகத்தை விட்டு அமெரிக்கவிற்குத் தப்பிச் சென்றனர்.

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, கியூபா நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் பெரும்பாலும், ஆபத்தான தற்காலிகப் படகுகள் மீது ஏறி, தங்கள் தாயகத்தை விட்டு அமெரிக்கவிற்குத் தப்பிச் சென்றனர்.
ஃபிடல் காஸ்ட்ரோ

பட மூலாதாரம், Magnum Photos

படக்குறிப்பு, ஆனால், ஃபிடல் காஸ்ட்ரோ பொதுமக்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொண்டு உலகின் மிக நீண்ட கால ஆட்சி செய்த தலைவர்களில் ஒருவராக மாறினார்
2008ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி, ஹவானாவில் வெனிசுவேலா நாட்டின் அதிபர் ஹியூகோ சாவேஸ் மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் மற்றும் அதிகாரத்தில் இருந்த கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவுடன் நடந்த ஒரு சந்திப்பின் போது எடுத்த படம்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி, ஹவானாவில் வெனிசுவேலா நாட்டின் அதிபர் ஹியூகோ சாவேஸ் மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் மற்றும் அதிகாரத்தில் இருந்த கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் நடந்த ஒரு சந்திப்பின் போது எடுத்த படம். 2006 ஆம் ஆண்டு குடல் அறுவை சிகிச்சைக்குப் பின்னர், அவர் தனது சகோதரர் ரவுலிடம் அதிகாரத்தை கையளித்தார். 2008ம் ஆண்டு, முழு அதிகாரத்தையும் ஒப்படைத்த அவர், வெகு அரிதாகவே காணப்பட்டார்.
2010ம் ஆண்டு, செப்டம்பர் 3ம் தேதி, ஹவானா பல்கலைக்கழகத்தில் காஸ்ட்ரோ ஒரு உரை நிகழ்த்தினார். செப்டம்பர் 2010 ல், பிடல் காஸ்ட்ரோ, அறுவை சிகிச்சைக்கு பிறகு, நான்கு ஆண்டுகளுக்குப் பின் முதல் 2010ல் முறையாக ஒரு கூட்டத்தில் உரையாற்றினர். அவர் கடைசியாக 2016 ஆகஸ்ட் மாதம் தனது 90வது பிறந்தநாளின் போது பொது வெளியில் காணப்பட்டார்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, செப்டம்பர் 2010 ல், ஃபிடல் காஸ்ட்ரோ, அறுவை சிகிச்சைக்கு பிறகு, நான்கு ஆண்டுகளுக்குப் பின் முதல் 2010ல் முறையாக ஒரு கூட்டத்தில் உரையாற்றினர். அவர் கடைசியாக 2016 ஆகஸ்ட் மாதம் தனது 90வது பிறந்தநாளின் போது பொது வெளியில் காணப்பட்டார்.