இந்தி மொழி சர்ச்சை: கன்னட நடிகருடன் மோதிய பாலிவுட் நட்சத்திரம்

காணொளிக் குறிப்பு, இந்தி மொழி சர்ச்சை: கன்னட நடிகருடன் மோதிய பாலிவுட் நட்சத்திரம்

கன்னட மொழி திரைப்படமான 'கே.ஜி.எஃப்2' சமீபத்தில் பான் இந்தியா திரைப்படமாக இந்தியா முழுவதும் வெளியாகி வெற்றிபெற்று உலகம் முழுவதும் 500 கோடிக்கும் அதிகமான வசூல் பெற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்திற்கு முன்பு வெளியான 'புஷ்பா', 'ஆர்.ஆர்.ஆர்.' படங்களும் பான் இந்தியா படமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில், ஒரு திரைப்பட விழா ஒன்றில் நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்ற நடிகர் சுதீப் கலந்து கொண்டார்.

அதில் கன்னட திரைப்படம் ('கே.ஜி.எஃப்2') பான் இந்தியா திரைப்படமாக வெற்றி பெற்றது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுதீப், 'பான் இந்தியா படம் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டதாக சொன்னீர்கள். ஒரு திருத்தம். இந்தி இனி தேசிய மொழி கிடையாது. பாலிவுட்டிலும் பான் - இந்தியா திரைப்படங்களை தயாரிக்கிறார்கள். அவர்கள் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெற்றியை பெற போராடுகிறார்கள். ஆனால் நாங்கள் எங்கும் வெற்றி பெறுகிறோம்" என பேசி இருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் முழு விவரம் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :