ராஞ்சனா ரீரிலீஸ்: ஏஐ மூலம் கிளைமாக்சை மாற்றியதற்கு நடிகர் தனுஷ் எதிர்ப்பு ஏன்?

ராஞ்சனா ரீரிலீஸ்: ஏஐ மூலம் கிளைமாக்சை மாற்றியதற்கு நடிகர் தனுஷ் எதிர்ப்பு ஏன்?

ரிரிலீஸ் செய்யப்படும் ராஞ்சனா திரைப்படத்தில் ஏஐ மூலம் செய்யப்பட்டுள்ள மாற்றத்துக்கு நடிகர் தனுஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2013-ம் ஆண்டு தனுஷ், சோனம் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ராஞ்சனா.

அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம், இப்படத்தின் தமிழ் வடிவமான 'அம்பிகாபதி' புது க்ளைமாக்ஸ் உடன் வெளியிடப்படும் என்று கடந்த மாதம் அறிவித்திருந்தது.

படத்தின் உண்மையான கதையில் உயிரிழக்கு கதாநாயகன் மீண்டும் உயிருடன் வருவது போன்று ஏஐ கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு படத்தின் கதாநாயகன் தனுஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது படத்தை ஆன்மா இல்லாமல் ஆக்கிவிடும் என்று அவர் கூறியுள்ளார்.

எனினும், படத்தின் உரிமையை பெற்றுள்ள நிறுவனமான ஈரோஸ் இன்டர்நேஷனல், இந்த புது உருவாக்கம் ஒரு Creative Reimagining என்று கூறியுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு