காணொளி: சாலையில் நடந்து சென்ற பெண்ணை முட்டிய மாடு

காணொளி: சாலையில் நடந்து சென்ற பெண்ணை முட்டிய மாடு

ராமேஸ்வரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை மாடு ஒன்று முட்டியது.

இன்று (ஜனவரி 22) காலை ராமநாதசாமி கோவிலுக்கு வந்திருந்த கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணை சாலையில் வேகமாக ஓடி வந்த மாடு முட்டியது.

அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தலையில் எட்டு தையல் போடப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு