இலங்கை: வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இடையே பாலம் அமைக்கப்படாதது ஏன்?

காணொளிக் குறிப்பு, இலங்கை: வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இடையே பாலம் அமைக்கப்படாதது ஏன்?
இலங்கை: வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இடையே பாலம் அமைக்கப்படாதது ஏன்?

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இந்த இரண்டு மாகாணங்களுக்கு இடையில் சுமார் 800 மீட்டர் பகுதியை கடல் நீர் பிரிக்கிறது. இதை கடல் வழியாக கடக்க 6 நிமிடங்களே ஆகும், ஆனால் சாலை மார்க்கமாக செல்ல இரண்டரை மணிநேரம் தேவைப்படும்.

இந்த இரு மாகாணங்களை இணைக்கும் விதத்தில் ஒரு பாலம் இதுவரை கட்டப்படவில்லை. பாலம் கட்டப்படாததன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பின்னணி என்ன? விரிவாக பார்க்கலாம்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் எல்லைப் பகுதியாக கொக்கிளாய் பகுதியும் கிழக்கு மாகாணத்தின் எல்லைப் பகுதியாக புல்மோட்டை பகுதியும் உள்ளது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் நிலப்பரப்பு ரீதியில் பிரிந்தே இன்றும் காணப்படுகின்றன.

இந்த இரண்டு மாகாணங்களுக்கும் இடையில் நீர் வழியாக பயணிக்க சிறிய படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. 800 மீட்டர் தூரத்தை படகின் மூலம் சுமார் 6 நிமிடங்களில் கடக்க முடியும். சாலை மார்க்கமாக பயணிக்க, கிழக்கு மாகாணத்திலிருந்து வடக்கு மாகாணத்தின் எல்லைக்கு செல்ல சுமார் 60 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். இந்த தூரத்தை குறைக்கும் வகையில் இரு மாகாணங்களுக்கிடையே பாலம் அமைத்தல் 2 அல்லது 3 நிமிடங்களில் இரு பகுதிகளுக்கிடையே பயணித்துவிட முடியும் என மக்கள் கூறுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)